Dora, Buji: போதை பழக்கம்.. பிரிந்த டோரா - புஜ்ஜி ஜோடி..நடந்தது என்ன?
போதை பழக்கம் காரணமாக டோரா - புஜ்ஜி ஜோடி பிரிந்துவிட்டார்கள்.

டோரா - புஜ்ஜி ஜோடி
இப்போது உள்ள காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் மூலம் ஏராளமானோர் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி ஒரு ஜோடி தான் டோரா புஜ்ஜி. டோரா புஜ்ஜி என்ற சேனல் தொடங்கி ரீல்ஸ் செய்து பிரபலமானார்கள் ஹரி மற்றும் தேசராணி. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இவர்கள் இருந்தார்கள்.
தேசராணி பெண், ஆனால் ஹரி பெண்ணாக இருந்து ஆணாக மாறினார். இதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் காதலை மட்டும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், ஹரி மற்றும் தேசராணி இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டு உள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று, தேசராணி தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.