தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Ad Update: கமல்ஹாசன்,பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 கி.பி’ படம் குறித்த முக்கிய தகவல் நாளை வெளியீடு?

Kalki 2898 AD Update: கமல்ஹாசன்,பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 கி.பி’ படம் குறித்த முக்கிய தகவல் நாளை வெளியீடு?

Marimuthu M HT Tamil
Apr 20, 2024 07:10 PM IST

Kalki 2898 AD Update:கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் நடிக்கும் படம்‘கல்கி 2898 கி.பி.’, இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்புக் குழுவினர் விரைவில் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கல்கி 2898 கி.பி.’
‘கல்கி 2898 கி.பி.’

ட்ரெண்டிங் செய்திகள்

தெலுங்கு மொழியில் 'யெவடே சுப்ரமண்யம்', 'மகாநடி' போன்ற படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ள 'சயின்ஸ் ஃபிக்ஷன்' வகையைச் சார்ந்த திரைப்படம், ‘கல்கி 2898 கி.பி’.

இந்தப்படம் ஒரு புராண அறிவியல் புனைகதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான அனைத்து தயாரிப்புகளுக்கு மத்தியில், தயாரிப்பாளர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) ’கல்கி 2898 கி.பி’ திரைப்படம் குறித்த பெரிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், படத்தைத் தயாரித்த படக்குழுவினருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, "'கல்கி 2898 கி.பி' படக்குழு இந்த ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் படம் தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். பெரிய புரோமோசன் நிகழ்ச்சிகளை செய்யும் தயாரிப்புநிறுவனத்தின் அறிவிப்பானது, பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பின் மூலம், படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அவர்கள் அறிவிப்பார்கள் என்பதையும் அந்த படத்தின் தயாரிப்புக்குழுவுக்கு நெருக்கமானவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், 'கல்கி 2898 கி.பி' படத்தின் கதை, கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கான் என்னும் காமிக் மாநாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. அப்போது உலகளாவில் நல்ல பாராட்டைப் பெற்றது.

2024 லோக்சபா தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது. 

படத்தயாரிப்புக் குழு, வரும் மே 9ஆம் தேதி படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த திரைப்படம், மக்களவைத் தேர்தல் காரணமாக, புதிய தேதியில் திரையரங்குகளில் வரும் எனப் பேசப்பட்டது. இந்நிலையில் ’கல்கி 2898 கி.பி’ வெளியீட்டு தேதி மாற்றம் குறித்து தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்தியாவில் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் அதிகம் இல்லை. சில டைம் டிராவல் படங்கள் பண்ணியிருக்கலாம். இது மிக வித்தியாசமானது.

ஏனென்றால் இது ஒரு தனி உலகில் நடக்கிறது. மேலும், சர்வதேச அர்த்தத்தில், இது புதிய வகையிலான திரைப்படம் ஆகும். ஏனென்றால், துன்பலோக அமைப்பில், இந்தியாவை நாம் பார்க்கவில்லை. எனவே, இந்தப் படத்தில் நாம் லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களைப் பார்க்க வேண்டியதில்லை. இந்தப் படத்தில், நாங்கள் உருவாக்கிய நகரங்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.

முதல் இரண்டு ஆண்டுகளில், இப்படத்துக்காக நாங்கள் நிறைய வேலை செய்தோம். பின்னர் இந்த டெக்ஸ்ட்-டு இமேஜ் மற்றும் இமேஜ்-டு டெக்ஸ்ட் ஜெனரேட்டர் வந்த பிறகு, இப்படத்திற்கான நிறைய வேலைகளை எளிதாக செய்ய முடிந்தது’’ என்றார்.

இதனால் இப்படம் முழுக்க கற்பனை உலகில் நடக்கும் அறிவியல் சார்ந்த கதை என்பது தெள்ளத் தெளிவாக நடக்கிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்