தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜயகாந்தின் வேட்டி சட்டையை அணிந்த ரஜினி.. இன்னும் அதே எளிமை.. மணிரத்னத்துடன் புது படம்.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு

விஜயகாந்தின் வேட்டி சட்டையை அணிந்த ரஜினி.. இன்னும் அதே எளிமை.. மணிரத்னத்துடன் புது படம்.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு

Marimuthu M HT Tamil

Dec 02, 2024, 04:47 PM IST

google News
விஜயகாந்தின் வேட்டி சட்டையை அணிந்த ரஜினி.. இன்னும் அதே எளிமை.. மணிரத்னத்துடன் புது படம்.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு தகவல் அளித்துள்ளார்.
விஜயகாந்தின் வேட்டி சட்டையை அணிந்த ரஜினி.. இன்னும் அதே எளிமை.. மணிரத்னத்துடன் புது படம்.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு தகவல் அளித்துள்ளார்.

விஜயகாந்தின் வேட்டி சட்டையை அணிந்த ரஜினி.. இன்னும் அதே எளிமை.. மணிரத்னத்துடன் புது படம்.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு தகவல் அளித்துள்ளார்.

விஜயகாந்தின் வேட்டி சட்டையை அணிந்த ரஜினி பற்றியும், இன்னும் அதே எளிமை குறித்தும், மணிரத்னத்துடன் புது படம் பற்றியும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் பேசியிருப்பதாவது,''ரஜினி காந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். அவருக்கு என்ன கேட்டது எல்லாம் கிடைக்குது என்று காது பட பேசுவதாகவும், அப்படி கேட்டது எல்லாம் கிடைத்தால் வரமில்லை என்றும், அது சாபம் என்றும் ரஜினி சொல்லியிருப்பார்.

எதுக்கு இவர் இப்படி பேசுறார். தனக்குக் கிடைத்ததை மறைத்துப் பேசுகிறார் என ரஜினி மீது விமர்சனங்கள் எல்லாம் உண்டு. அதுக்குப் பின் ரஜினிக்கு என்று இருக்கும் வலி பெரியது. இன்றைக்கு 74 நான்கு வயது ஆகிவிட்டது ரஜினி அவர்களுக்கு, ஆனாலும், அது வரம் தான் நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் மன ரீதியாக தொய்வு வந்துவிடும். உடல்ரீதியாகப் பிரச்னையாக வந்திடும். ஆனால், ரஜினி இமயமலைக்குப் போய் செட்டில் ஆகிவிடலாம், இல்லையென்றால் கேளம்பாக்கம் பண்ணைவீட்டில் போய் செட்டில் ஆகிவிடுவேன் என நினைத்தாலும் ரஜினியை அவரது ரசிகர்கள் விடுவதாகத் தெரியவில்லை.

கூலி படப்பிடிப்பு:

கூலி படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சில காட்சிகள் கிரீன்மேட் வைத்தும், சில காட்சிகள் லைவ் லொகேஷனிலும் வைத்து எடுக்கப்போகிறார்கள். அதன்பின், போஸ்ட் புரொடக்சனில் அதிக கவனம் செலுத்தப்போகிறார், லோகேஷ் கனகராஜ். காரணம் என்னவென்றால், லியோ படத்தின் மீது வந்த விமர்சனம். திரும்பவும் மாஸ்டர் மாதிரியான படத்தைக் கட்டாயம் கொண்டு வந்து நிறுத்தவேண்டிய இடத்தில் இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். ஜெயிலர் படத்தில் நெல்சனுக்கு இருந்த பிரச்னை, லோகேஷ் கனகராஜூக்கும் இருக்கிறது.

கூலி திரைப்படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்கான சாத்தியங்கள் உண்டு எனச்சொல்கிறார்கள். குறிப்பாக கோடை விடுமுறையை ஒட்டி, படத்தை ரிலீஸ் செய்யத்திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் கூலி படத்தின் அப்டேட் வரப்போகிறது. அடுத்து ஜெயிலர் 2வுக்கு உண்டான வேலையை நெல்சன் ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் மீறி, நமக்கு கிடைத்த தகவலின் படி, அடுத்த வருடம் ஜெயிலர் 2 செய்கிறாரா, இல்லை மணிரத்னத்துடன் ஒரு படம் பண்ணப்போகிறாரா, ரஜினி என விஷயம் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக மணிரத்னம் ரஜினியுடன், தளபதி படத்துக்குப் பின் படம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தின் பாய்ச்சல்:

இயக்குநர்களுக்கு சில நேரங்களில் சரிவு ஏற்படும். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தக் லைஃப் படத்தின் டீஸரில் மிரட்டியிருந்தார், மணிரத்னம். அதைப்பார்த்து ரஜினி இம்ப்ரெஸ் ஆகியிருக்கிறார். முன்னதாக, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு சிறிய ரோலில் கூட நடிக்கமுடியாத ஆதங்கத்தை ரஜினி இசை வெளியீட்டு விழா மேடையில் சொல்லியிருப்பார்.

ரஜினிக்கு பணத்தாசை எனப் பலர் சொல்வார்கள். ஆனால், அவரை நம்பி தயாரிப்பாளர்கள் வருவதால், அதற்கு மறுப்புச் சொல்லமுடியாமலும், பெங்களூருவில் இருந்து வந்த கஷ்டங்கள் என எல்லாத்தையும் நினைத்துப் பார்ப்பதால் அடுத்தடுத்து படத்தில் கமிட் ஆகிறார்.

ரஜினி நினைத்திருந்தால் விளம்பரப் படங்களில் நடித்திருந்தால், இன்னும் நிறைய சம்பாதித்திருக்கலாம். அம்பானியே பிராண்ட் அம்பாஸ்டராக இருக்கச் சொல்லும்போது அதை மறுத்தவர், ரஜினிகாந்த். அதற்குக் காரணம், அவரோட எளிமை தான்.

ரஜினியின் எளிமைக்கு உதாரணமான நிகழ்வு:

தயாரிப்பாளர் காஜாமைதீன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது, அவர் என்கிட்ட சொன்னது, ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர்போகும்போது சில நடிகர்கள் தங்களுக்கு தனியாக கார் வைங்கன்னு சொல்லி ஈகோ பிரச்னை வந்திருக்கு. அப்போது, ரஜினி நடிகர்களுக்கு என்று சடார்னு புக் செய்திருந்த பஸ்ஸில் போய் உட்கார்ந்திட்டாராம். அதன்பின், எல்லோரும் போய் உட்கார்ந்து இருக்காங்க.

சிங்கப்பூரில் போய் ஹோட்டல் ரூமில் இறங்கியதும், ஒரு வெள்ளைக் கலர் துண்டை கட்டிக்கொண்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைந்துகொண்டு இருந்திருக்கிறார், ரஜினி. அதைப் பார்த்து அவரிடம் காஜாமைதீன் கேட்கும்போது, ‘பஸ் மாறி வந்ததால், என் லக்கேஜ் வேறு இடத்தில் மாட்டிக்கிச்சு. அது வர்றப்ப வரட்டும். விஜயகாந்த் வேட்டி சட்டையைக் கொடுத்து அனுப்புறேன்னு சொல்லியிருக்கார். அதற்காக காத்திருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு உச்ச நட்சத்திரம் அவ்வளவு எளிமையாக இருந்திருக்கார்’’ என சொல்லி முடித்தார், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு

நன்றி: செய்யாறு பாலு யூட்யூப் சேனல்

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி