தன் செல்லப் பிள்ளைக்காக பல முக்கிய நடிகர்களை எதிர்த்து நின்ற மணிரத்னம்.. ரகசியம் உடைத்த செய்யாறு பாலு
சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும், மணிரத்னத்திற்கு செல்லப் குழந்தையாக இருப்பது அந்த ஒரு நடிகர் மட்டும் தான். அவருக்காக மணிரத்னம் பல முக்கிய பிரபலங்களை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக தற்போது வரை தன் ஆளுமையை நிரூபித்து வரும் இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். திரைத்துறையில் தன் முதல் படத்திற்கு அளித்த அதே முக்கியத்துவத்தை இன்றும் டிரேட்மார்க் முத்திரை பதித்து நிரூபித்து வருபவர்.
பாலுமகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா, என தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இயக்குநர்களுக்கு மத்தியில், தன்னுடைய தனித் திறமையாலும் தனித்துவத்தாலும் வெற்றி நடை போட்டு என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். மற்ற கலைஞர்களின் படைப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டை ஏற்படுத்தி வெற்றி கண்டவர் மணிரத்னம்.
நடிகர்கள் விரும்பும் இயக்குநர்
இயக்குநரின் வேலை கதையையும், காட்சியை ஒருங்கிணைப்பது என நில்லாமல், கேமிரா ஆங்கிள், திரைக்கதையின் பிரேம்கள் என அனைத்தையும் செதுக்கி வைத்திருப்பார். இன்றைய காலத்திலும் மணிரத்னம் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் தான். மணிரத்னம் படங்களில் திரைக்கதைக்கு இணையான முக்கியத்துவம் கதாபாத்திரங்களுக்கு ஏற்று நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்வதிலும் இருக்கும். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்த நடிகர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு முறையேனும் அவரின் படங்களில் நடித்து விட வேண்டும் என்பதற்கு காரணமும் அதுவே.