கரகாட்டாக்காரனின் எகிடுதகிடு வெற்றி.. ராமராஜனை பார்த்து நடுங்கினாரா ரஜினிகாந்த்? - உண்மையை உடைத்த ராமராஜன்!
கரகாட்டாகாரன் உள்ளிட்ட படங்களின்வெற்றி நடிகர் ரஜினிகாந்திற்கு ராமராஜன் மீது பயத்தை உண்டாக்கியதா? - ராமராஜன் பதில்

80 களில் ராமராஜன் வளர்ச்சியையும், அவருக்கு கூடும் கூட்டத்தையும் பார்த்து நடிகர் ரஜினி பயந்தார் என்ற பேச்சு திரைத்துறையில் நெடும்காலமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அது உண்மையா என்பதை நடிகர் ராமராஜனே கடந்த 3 மாதங்களுக்கு குமுதம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசினார்.
அதிகபட்சமாக ஒரு கோடி வரை
இது குறித்து அவர் பேசும் போது, “ 35 வருடங்கள் ஆன பின்னரும் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மக்கள் மனதில் ஆழப் பதிந்து இருக்கிறது. உலகம் இருக்கிற வரை, அங்கு ஊர் இருக்கும் வரை, அங்கு கோயில் இருக்கும் வரை, அங்கு திருவிழா நடக்கும் வரை, அங்கும் கரகம் இருக்கும்.
கரகம் இருக்கும் வரை, என்னுடைய நினைப்பு கரகாட்டம் என்ற கலையின் மூலமாக, கரகாட்டக்காரன் படத்தின் வழியாக இருந்து கொண்டே இருக்கும். இதைவிட ஒரு நடிகனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். அப்பொழுதே அதிகபட்சமாக ஒரு கோடி வரை சம்பளம் பெற்றது நான் மட்டும்தான்.