தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  5 Years Of Super Deluxe : எதிர்பாராத திருப்புமுனை.. தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பு.. 5ஆம் ஆண்டில் சூப்பர் டீலக்ஸ்!

5 years of Super Deluxe : எதிர்பாராத திருப்புமுனை.. தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பு.. 5ஆம் ஆண்டில் சூப்பர் டீலக்ஸ்!

Divya Sekar HT Tamil

Mar 29, 2024, 05:45 AM IST

google News
5 years of super deluxe : எதிர்பாராத திருப்புமுனையுடன், 100 ஆண்டு கால தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இத்திரைப்படம் பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.
5 years of super deluxe : எதிர்பாராத திருப்புமுனையுடன், 100 ஆண்டு கால தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இத்திரைப்படம் பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.

5 years of super deluxe : எதிர்பாராத திருப்புமுனையுடன், 100 ஆண்டு கால தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இத்திரைப்படம் பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்திறகு உதவித் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றினார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம் , அப்துல் ஜபார் மற்றும் நவீன் ஆகியோர் நடித்துள்ளனர். மிஷ்கின்,காயத்ரி,பகவதி பெருமாள் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பி. எஸ். வினோத், நீரவ் ஷா ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். நலன் குமாரசாமி, நீலன். கே. சேகர் மற்றும் மிஷ்கின் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் திரைக்கதை எழுதினர்.

இப்படம் விறுவிறுப்பான சுவாரஸ்ய காட்சிகளால் எவ்வித குறையும் இல்லாமல் மிகவும் நேர்த்தியான திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. தற்போது ஆந்தலாஜி பாணி படங்கள் தமிழில் ஏரளாமான வர தொடங்கியுள்ளன. இதற்கு எல்லாம் முன்னோடி சூப்பர் டீலக்ஸ் படம் தான். இப்படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இப்படத்திற்கு முதலில் வைத்த பெயர் அநீதி கதைகள். பின்னர் தான் மாற்றி சூப்பர் டீலக்ஸ் என பெயர் வைத்தார்கள்.  நான்கு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒவ்வொரு கதையும் பெண்கள் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் பற்றி பேசியது.

இப்டத்தில் வேம்புவாக சமந்தா நடித்து இருப்பார். லீலாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்து இருப்பார். இவர்கள் செய்யும் செயலுக்கு பின்னால்ஆண் ஒருவர் ஒளிந்திருந்தாலும் இறுதியில் அநீதி என்னவோ இந்த பெண்களுக்கு இழைக்கப்படும். இதனை இப்படத்தில் அழகாக காட்டி இருப்பார்கள்.

பாடல்கள், பைட்டுகள், வலிந்து திணிக்கப்பட்ட காமெடிகள் என எதுவும் இல்லாமல் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் தொடக்கும் முதல் இறுதி வரையிலும் எந்தவொரு காட்சியும் தேவையற்றது என்று உணர்வை ஏற்படுத்தாத விதமாக அமைந்திருக்கும். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்று நடிக்கமாட்டார்கள். ஆனால் டாப் நடிகராக விஜய் சேதுபதி இருந்தும் இந்த கதாபாத்திரத்தை தயக்கம் இன்றி ஏற்று நடித்தார். 

இப்படத்தில் விஜய்சேதுபதி மனைவியையும், மகனையும் தவிக்கவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுவார். ஒரு நாள் விஜய்சேதுபதி வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் தகவல் தெரிவிக்க தன் கணவன் வருவான் என மேக்கப் போட்டு கொண்டு மனைவியும், தனது அப்பா வரப்போகிறார் என்ற உற்சாகத்தில் மகனும் காத்து இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஆணாக சென்ற விஜய் சேதுபதி பெண்ணாக மாறி வீட்டிற்கு வருவார். அதன் பின்னர் வீட்டிலும் சமூகத்திலும் அவர் என்னனென்ன இன்னல்களை சந்திக்கிறார் என்பதே கதை.

அதேபோல மற்றொரு கதையில் ஆண் நண்பரை வரவைத்து மாட்டிக்கொள்ளும் சமந்தா தனது கணவர் பகத் பாசில் உடன் லிப்டில் செல்கிறார். அப்போது கரண்ட் கட் ஆகிறது. மிகுந்த கோபத்தில் இருக்கும் பகத்திடம் பதற்றம் வேண்டாம் என சமந்தா சொல்ல அதைக்கேட்ட பகத் இத ஒரு பத்தினி சொல்லிட்டா பாரு என சொல்லும் போது கரண்ட் வந்துவிடும். ஆனால் டுவிஸ்டார் கரண்ட் வந்து லிப்ட் ஒர்க் ஆகிவிடும். இதே பகத் கிளைமாக்ஸில் போலீஸான பெர்லினின் மோசமான ஆசைக்கு இணங்க மனைவியிடமே மன்றாடி தனது முரணான எண்ணத்தை வெளிப்படுத்துவார்.

அதேபோல ரம்யாகிருஷ்ணன் இப்படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். லீலா பாலியல் தொடர்பான படங்களில் நடிப்பது அவரின் மகனுக்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் கொண்ட மகன் அம்மா என்றும் பாராமல் கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்பார். இதனை ஆத்திரப்படாமல் பொருமையாக கேட்க்கும் லீலா எதார்த்தம் என்னவென்று மகனுக்கு புரியவைப்பார். அதாவது நமது வாழ்க்கையில் இதுதான் சரி இது தவறு என பிரித்து வாழ்வதை தாண்டி வாழ்க்கை கூட்டி செல்லும் பாதையில் பயணித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதை தனது திரைக்கதை மூலம் சொல்லி இருப்பார் தியகராஜா குமாரராஜா.

2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் தான் தியகராஜா குமாரராஜாவின் முதல் படம். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு 8 வருடங்கள் கழித்து இவர் இயக்கத்தில் வெளியான படம் தான் சூப்பர் டீலக்ஸ். இந்த நீண்ட இடைவெளியை சிறந்த படைப்பின் மூலம் பூர்த்தி செய்தார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.

அத்துடன் எதிர்பாராத திருப்புமுனையுடன், 100 ஆண்டு கால தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இத்திரைப்படம் பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி