தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi: தமிழ்நாட்ல ஹிந்தி படிக்க வேண்டாமா.. யாரு சொன்னா? - டென்ஷனான விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: தமிழ்நாட்ல ஹிந்தி படிக்க வேண்டாமா.. யாரு சொன்னா? - டென்ஷனான விஜய் சேதுபதி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 07, 2024 06:48 PM IST

இந்த மாதிரியான கேள்வியை நீங்கள் அமீர்கான் சார் வந்த போதும் கேட்டீர்கள் இல்லையா? எல்லா சமயத்திலும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?

விஜய்சேதுபதி!
விஜய்சேதுபதி!

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது கத்ரீனா கைஃப் - உடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தொடர்பாக அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

இந்த மாதிரியான கேள்வியை நீங்கள் அமீர்கான் சார் வந்த போதும் கேட்டீர்கள் இல்லையா? எல்லா சமயத்திலும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. 

ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இங்கு நிறைய பேர் ஹிந்தி படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்க வில்லை. அதற்கான விளக்கம் அமைச்சர் பி.டி.ஆர் ஒரு இடத்தில் தெளிவாக கொடுத்து இருப்பார்கள். அதை சென்று பாருங்கள்” என்று பேசினார்.

முன்னதாக, உரையாடல் ஒன்றில் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத போது நெஞ்சமே உருகுலைந்து விட்டது என்று பேசி இருந்தார். இந்த பேட்டியும் இங்கே! - படியுங்கள்!

இது குறித்து பாலிவுட் ஹங்காமா சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் “ சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத போது நான் மிகவும் வருந்தினேன்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பதிலாக, ரன்வீர் சிங் நடித்த கில்லி பாய் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட போது, என் நெஞ்சமே நொறுங்கி விட்டது. நான் அந்தப்படத்தில் நடிக்காமல் இருந்தாலும், அந்தப்படம் ஆஸ்கருக்கு செல்ல நான் விரும்பி இருப்பேன். உள்ளே ஏதோ நடந்து விட்டது. நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை" என்று பேசினார்.

விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோரது நடிப்பில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார்.

இந்தப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற போதும், வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது. இந்தப்படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்