4 Years of Super Deluxe: வாழ்வின் ரகசியத்தை சொன்ன மாற்று சினிமா சூப்பர் டீலக்ஸ்
மாற்று சினிமாவாக வெளியாக ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை தந்த வாழ்வின் ரகசியம் இதுதான் என்று சொன்ன சூப்பர் டீலக்ஸ் வெளியாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி என்கிற பெயரில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெளியாகியுள்ளன. படத்தின் கதைக்களம், திரைக்கதை வடிவமைப்பு, மாறுபட்ட கதாபாத்திரங்கள், தொழில்நுட்பத்தில் புதுமை போன்ற நடைமுறையிலிருந்து மாறுபட்டு வழக்கத்துக்கு மாறான சினிமாக்கள் குறிஞ்சி பூ போல் வருவதுண்டு. மாற்று சினிமா என்று அழைக்கப்படும் இதுபோன்ற படங்களில் சில, ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டாவதோடு, தமிழ் சினிமாவுக்கு புதிய பாதை அல்லது ட்ரெண்டை வழிகாட்டி செல்கிறது.
இன்னும் சில படங்கள் பெரிதாக கவனிக்கப்படாமல், ரசிகர்களின் கவனத்தை ஈரக்காமலும் வருங்கால இயக்குநர்கள், சந்ததியினருக்கு ஒரு ரெபரன்ஸாகவும் இருந்து வருகிறது. ஆனால் தியாகாராஜன் குமாரராஜா இயக்கத்தில் அநீதி கதைகள் என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு பின்னர் சூப்பர் டீலக்ஸ் என வெளியாகி ரசிகர்கள் ஒரு விதமான புதுமையான சினிமா அனுபவத்தை தந்தது.
கோலிவிட் படைப்பாளிகள் மேற்கொண்ட பல வித்தியசாமான முயற்சிகளில், ஆந்தாலஜி என்று சொல்லப்படும் பல்வேறு கதைகள் சேர்ந்த ஒரு கதை கொண்ட படம் அல்லது பல கிளைகதைகள் கொண்ட ஒரு படம் என்ற மேற்கத்திய பாணி படைப்புகளை உருவாக்காமல் விட்டு வைத்திருந்தனர். ஆனால இந்திய சினிமாக்களில் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்களில் இதுபோன்ற முற்சிகள் தமிழில் தொடங்குவதற்கு சில காலம் முன்னரே சோதனை செய்து வெற்றியும் கண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வரும் விருந்தாளிகளுக்கு டிபன், சாப்பாடு என இரண்டும் கலந்த உணவுகளை வெரைட்டி கட்டி பரிமாறப்படுவதுபோல் அமைந்திருக்கும் ஆந்தலாஜி பாணி படங்கள் தற்போது தமிழில் ஏரளாமான வர தொடங்கியுள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்துக்கு முன்னர் இதே பாணியில் பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் கூட ஏதாவது படம் வந்திருந்தாலும், சூப்பர் டீலக்ஸ் வெளிப்படுத்திய தாக்கம் மற்ற மொழி சினிமாக்களிடமிருந்து தமிழ் சினிமாவின் தனித்துவமாக காட்டியது.
இந்தப் படத்துக்கு சூப்பர் டீலக்ஸ் என்கிற பெயரை விட அநீதி கதைகள் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக படத்தின் கதை(கள்) ஒவ்வொரு வாழ்கையிலும் நிகழும் நியாங்களும் அதன் விளைவாக அவர்களுக்கு நிகழும் அநீதியையும் பிரதிபலித்தது. ஆனால் வெறும் அநீதி என்ற புள்ளியோடு நிறுத்தாமல் இவற்றை கடந்த செல்லும் வாழ்வின் ரகசியம் இதுதான் என ஒரு மாற்று சிந்தினை விதைத்ததால் சூப்பர் டீலக்ஸ் ஆனது.
நான்கு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒவ்வொரு கதையும் பெண்கள் பெண்கள் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் பற்றி பேசியது. படத்தில் ஒரு கதையில் வேம்புவாக தோன்றிய சமந்தா, இன்னொரு கதையில் லீலாவாக தோன்றிய ரம்யா கிருஷ்ணன், ஷில்பா என மாறிய மாணிக்கம் என அவர்கள் செய்த ஒரு விஷயங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் காட்டப்பட்டிருக்கும். இவர்களின் செயலால் தவறானவர்கள் என சூட்டிக்காட்டப்பட்டாலும், இவர்களின் செய்த விஷயங்களுக்கு பின்னால் ஆண் ஒருவர் ஒளிந்திருந்தாலும் இறுதியில் அநீதி என்னவோ இந்த பெண்களுக்கு இழைக்கப்படுவதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
பாடல்கள், பைட்டுகள், வலிந்து திணிக்கப்பட்ட காமெடிகள் என எதுவும் இல்லாமல் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் தொடக்கும் முதல் இறுதி வரையிலும் எந்தவொரு காட்சியும் தேவையற்றது என்று உணர்வை ஏற்படுத்தாத விதமாக அமைந்திருப்பதே தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பு லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. அத்துடன் அனைத்து காட்சிகளுக்கு பின்னணியிலும் எக்கச்சக்க குறியீடுகள், நுணுக்கங்கள் ஒளிந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமே. படத்தின் மொத்த காட்சிகள் பற்றி குறிப்பிட எக்கச்சக்க விஷயங்கள் இருந்து மேற்கூறிய கதாபாத்திரங்களுக்கு நிகழும் அநீதிகளை நியாயப்படுத்தும் சில விஷயங்களை கண்டிப்பாக குறிப்பட்டாக வேண்டும்.
இதுவரை எந்த ஒரு டாப் நடிகரும் அவ்வளவு எளிதில் ஏற்று நடித்திருராத திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதோடு, ஆணாக இருந்த அவர் மனைவியை விட்டு ஓடிப்போய் பின்னர் பெண்ணாக மாறி தனது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரை எதிர்பார்த்து காத்திருக்கும் செல்ல மகனுக்கும் ஷாக் கொடுப்பார். அதன் பின் அவர் எதிர்கொள்ளும் தொடர் அநீதிகளும், அவற்றுக்கான தனது நியாயத்தை வெளிப்படுத்துவதுமாக விஜய் சேதுபதி எபிசோடு செல்லும். இதில் மகனை பள்ளியில் பார்க்க செல்லும் ஷில்பாவான விஜய் சேதுபதியை வாட்ச்மேன் உள்ளே விடாதபோது, பள்ளி வெளியே இருக்கும் பாட்டி ஒருவரிடம் தனது நியாயத்தை அவர் எடுத்து கூறுவார். "நியாயம் வேற, நடைமுறை வேற" என ஒற்றை வரியில் அந்த பாட்டி சொல்வதில் நடைமுறை வாழ்க்கையுடன் ஒரு தனி மனிதனின் நியாயம் பொருந்தாவிட்டால் அநீதியே இழைக்கப்பட்டாலும் அவர் நியாயத்துக்கு நீதி கிடையாது என்கிற செய்தியை சொல்லியிருப்பார்.
மனஉளைச்சலில் இருக்கும் தனது முன்னாள் காதலனை வரவழைத்து சமதானபடுத்தியபோது நிகழ்ந்த தவறை புருஷனிடம் ஒப்புக்கொள்ளவும் வேம்புவான சமந்திடம், உச்சபட்சமாக கடிந்துகொள்ளும் பஹத் பாசில் அனல் வார்தைகளால் அவர் காயப்படுத்துவார். ஒரு காட்சியில் அவர்கள் இருவரும் லிப்டில் செல்லும்போது கரண்ட் கட்டாகி ஆஃப் ஆகிவிட, டென்ஷனாகும் பஹத்திடம், பதட்டப்பட வேண்டாம் லிப்ட் ஒர்க்காகும் என சமந்தா சொல்ல பெரிய பத்தின் சொல்லிட்டா என பதிவ் அளிப்பார். ஆனால் டுவிஸ்டார் கரண்ட் வந்து லிப்ட் ஒர்க் ஆகி ,விடும். இதே பஹத் கிளைமாக்ஸில் போலீஸான பெர்லினின் மோசமான ஆசைக்கு இணைங்க மனைவியிடமே மன்றாடி தனது முரணான எண்ணத்தை வெளிப்படுத்துவார்.
இதேபோல் லீலாவாகிய ரம்யாகிருஷ்ணனும் அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்கும் நடிகை என்று விஷயம் மகனுக்கு தெரியவர, அம்மா என்று கூட பாராமல் மோசமான வார்த்தைகளால் திட்டிய மகனிடம் எதார்த்தத்தை புரிய வைப்பார்.
ஒவ்வொருவரின் வாழ்வில் நடக்கும் விஷயங்களிலும் சரி, தவறு என பிரித்து பார்ப்பதை காட்டிலும் போகிற போக்கில் அவற்றை ஏற்று கொள்ளவதோ அல்லது கடந்து செல்வதனாலோ அவை தானாகவே சரியாகிவிடும் என்பதை தனித்துவமான திரைக்கதை மூலமாக சொல்லியிருப்பார் படத்தின் இயக்குநர் தியகராஜா குமாரராஜா.
இவரது முதல் படமான ஆரண்ய காண்டம் 2011இல் வெளியானது. அதன்பின்னர் 8 ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது படமாக சூப்பர் டீலக்ஸை இயக்கினார். இந்த நீண்ட இடைவெளியை சிறந்த படைப்பின் மூலம் பூர்த்தி செய்தார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.
மிகவும் நீளமான இந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் இடம்பெறாத போதிலும், தனது வித்தியாசமான பாணி பின்னணி இசையால் நிரப்பியிருப்பார் யுவன் ஷங்கர் ராஜா. அத்துடன் விறுவிறுப்பான சுவாரஸ்ய காட்சிகளால் எவ்வித குறையும் இல்லாமல் மிகவும் நேர்த்தியான திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.
செக்ஸ் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து மூன்று வெவ்வேரு கதைகள், வெவ்வேறு சூழ்நிலைகள் அவற்றிலிருந்த மீளும் வாழ்வின் ரகசியத்தை கடைசியில் எதிர்பாராத திருப்புமுனையுடன் சொன்ன 100 ஆண்டு கால தமிழ் சினிமா கண்டிராத மாற்று படைப்பாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது.
டாபிக்ஸ்