தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ்.. முதல் நாள் மாலை 5 மணி நிலவரம்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா..

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ்.. முதல் நாள் மாலை 5 மணி நிலவரம்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா..

Marimuthu M HT Tamil

Dec 05, 2024, 08:53 PM IST

google News
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ்.. முதல் நாள் மாலை 5 மணி நிலவரம்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா என்பது குறித்துப் பார்ப்போம்.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ்.. முதல் நாள் மாலை 5 மணி நிலவரம்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா என்பது குறித்துப் பார்ப்போம்.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ்.. முதல் நாள் மாலை 5 மணி நிலவரம்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா என்பது குறித்துப் பார்ப்போம்.

சுகுமார்-அல்லு அர்ஜுனின் கூட்டணியில் உருவாகியிருக்கும் புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டும் இந்தியப் படமாக உருவாகியுள்ளது.

மேலும், இந்தப் படம் ஜவான் மற்றும் கல்கி ஆகியப் படங்களின் முதல் நாள் ஓபனிங்கை வெல்லக்கூடும் எனத் தெரியவருகிறது.

5 மணி நிலவரப்படி:

Sacnilk.com இணையதள நிலவரப்படி, முதல் நாளான டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, படம் அனைத்து மொழிகளிலும் சுமார் 97 கோடி ரூபாய், நிகர வசூலை இந்தியாவில் ஈட்டியுள்ளது.

அமெரிக்காவில் விநியோகிஸ்தர்களான, பிரத்யங்கிரா சினிமாஸின் எக்ஸ் பதிவின்படி, இப்படம் வெறும் ப்ரீ புக்கிங் மூலம் 3.2 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது.

புக் மை ஷோவின் சினிமாஸ் தலைமை இயக்க அதிகாரி ஆஷிஷ் சக்சேனா கூறுகையில், "புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் அதிகாரப்பூர்வ சினிமா வசூல் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய முன்கூட்டிய டிக்கெட் விற்பனையில் 3 மில்லியன் டிக்கெட்டுகளைக் கடந்து விற்றுள்ளது.

இது இந்தியாவில் மிக அதிகம். இந்த ஆன்லைன் புக்கிங்கால், தொடக்க நாளில் ரசிகர்கள் புஷ்பா 2-வைப் பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருவதால், இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது எனத் தெளிவாகத் தெரிகிறது.

இந்திய சினிமாவின் நினைவுக்குரிய தருணம்:

இது புஷ்பா 2: தி ரூலின் சாதனையை முறியடிக்கும் மைல்கல் மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கு ஒரு நினைவுக்குரிய தருணம் ஆகும். அதன் தடுக்க முடியாத வளர்ச்சியை இப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், ஒரு கண்கவர் ஆண்டு இறுதி கொண்டாட்டத்திற்கு புஷ்பா 2 திரைப்படம் களம் அமைக்கிறது. ஏற்கனவே ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்னும் அந்தஸ்து பெற்றுள்ள புஷ்பா 2, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கவும், சினிமாவுக்கான வசூலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தவும் தயாராக உள்ளது.

அது எங்கே தரவரிசைப்படுத்தப்படும்?

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பனிங் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கிடைத்தது.

முதல் நாளில் மட்டும் ரூ.223 கோடியை ஈட்டியது. அந்த வரிசையில் பாகுபலி 2 முதல் நாளில் ரூ .217 கோடி வசூலையும், கல்கி திரைப்படம் முதல் நாளில் ரூ.175 கோடி வசூலையும் பெற்றுள்ளது. பல வர்த்தக ஆய்வாளர்கள் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் ரூ.250 கோடிக்கு மேல் உலகளவில் வசூலிக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

புஷ்பா 2 படம் எத்தகையது?:

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம்செட்டி மீடியா தயாரித்துள்ள திரைப்படம், புஷ்பா 2 தி ரூல். இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் புஷ்பராஜ், ஸ்ரீவள்ளி மற்றும் பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய வேடங்களில் மீண்டும் முறையே அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுனுக்கு முதல் பாகத்தில் நடித்ததற்காக தேசிய திரைப்பட விருது கிடைத்தது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், செம்மரக்கடத்தலின் பின்னணியில் இருக்கும் அதிகார மோதல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி