அல்லு அர்ஜூன் ஆட்டம் எடுபட்டதா?.. ஸ்ரீவள்ளி காதல்.. பாக்ஸ் ஆஃபீஸ் பந்தயத்தில் ஜெயிக்குமா புஷ்பா 2 - விமர்சனம் இங்கே!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 படத்தின் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா தி ரூல் படம் குறித்தான விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “விளையாட்டு எல்லாம் ஓய்ந்து விட்டது. தற்போது முழுக்க முழுக்க தொழிலில் இறங்கி விட்டேன்” என்று பதிவிட்டவர் அதற்கான அர்த்தத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பாதிக்கான டப்பிங் முடிவடைந்து விட்டது. இரண்டாம் பாதிக்கான டப்பிங் செய்து கொண்டிருக்கிறேன். மை காட் (என் கடவுளே) புஷ்பா திரைப்படத்தின் முதல் பாதி பயங்கரமாக, உறைய வைக்கும் விதமாக இருக்கிறது.
இரண்டாம் பாதி இன்னும் பயங்கரமாக இருக்கிறது. என்னால் வார்த்தைகளால் அதனை அடக்க முடியவில்லை. மிக மிக மிக சூப்பரான அனுபவத்தை காண தயாராக இருங்கள். என்னால் காத்திருக்க முடியவில்லை. படத்தில் நான் சோகமாக இருப்பதற்கான காரணம், ஷூட்டிங் முடிந்து விட்டது என்பதுதான்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் இடம் பெற இருக்கும் சிறப்புப் பாடலில், நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் என்று படக்குழு சார்பில் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்னதாக, 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் இடம்பெற்ற 'ஊ அண்டாவா' பாடலில் நடிகை சமந்தா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப்பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
படக்குழு விபரம்
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல், முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
மேலும், புஷ்பா: தி ரைஸ் (2021) பல இதயங்களை வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தில் புஷ்பராஜூவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.
புஷ்பா 2 திரைப்பட நடிகர்கள்:
புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சுகுமாரே எழுதி இயக்கி இருக்கிறார். படத்திற்கான வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் ’புஷ்பராஜ்’ என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ’ஸ்ரீவள்ளி’ என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்திலும் மீண்டும் நடித்துள்ளனர்.
புஷ்பா 2 எத்தனை மொழிகளில் ரிலீஸ்:
இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் இந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வரக்கூடிய டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.
புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்