தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hindi Remake Of Jaya Jaya Jaya Jaya Hey

Jaya Jaya Jaya Jaya Hey : இந்தியில் ரீமேக் ஆகும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’

Divya Sekar HT Tamil

Mar 20, 2023, 06:56 AM IST

அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இந்தியில் ரீமேக் ஆகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இந்தியில் ரீமேக் ஆகிறது.

அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம் விபின் தாஸின் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. 

ட்ரெண்டிங் செய்திகள்

Aamir Khan: பிகே ரேடியோ நிர்வாண காட்சி… ‘என்ன அப்படி பார்த்த என்ன இப்ப’ - ஓப்பனாக பேசிய அமீர்கான்!

Vj Archana on Prachi Nigam: ‘கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா.. 10ம் வகுப்பு பொண்ண போய்’ - வி.ஜே.அர்ச்சனா!

Varalaxmi Sarathkumar: ‘எங்க அப்பாவே அப்படித்தான்; செகண்ட் ஹேண்ட் பைக்க ஓட்ட மாட்டீங்களா?’ - பச்சையாக கேட்ட வரலட்சுமி!

Rathnam Box Office: ஆக்‌ஷன் அலப்பறை.. விஷாலுக்கு வெற்றி வந்ததா? - ரத்னம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

விப்பின் தாஸ் இயக்க, நடிகர்கள் பசில் யோசப், தர்சனா ராஜேந்திரன் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.6 கோடியில் உருவாக்கப்பட்டது.

படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபீஸில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் டிசம்பர் 22-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப், அவர் இயக்கிய மின்னல் முரளி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இயக்குநர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். பெண்ணால் தனியாக வாழ முடியும் ஆண்களால் முடியுமா? என்று நண்பர்களிடம் அவர் பேசும் ஒரு காட்சியே போதும். நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமானார்.

வேலை செய்யும் என்னால் எல்லோரிடமும் பேச முடிந்த போது கணவனால் மட்டும் ஐந்து நிமிடம் கூட மனைவியிடம் பேச முடியாதது ஏன்? என்ற கேள்வி படம் பார்க்கும் பலரையும் யோசிக்க வைக்கிறது.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அமீர் கான் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய விபின் தாஸே இருக்குகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.