தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குட் பேட் அக்லி.. அதிரடி மாற்றம் செய்த படக்குழு.. 17 வருஷத்துக்கு பின் காத்திருக்கும் சம்பவம்..

குட் பேட் அக்லி.. அதிரடி மாற்றம் செய்த படக்குழு.. 17 வருஷத்துக்கு பின் காத்திருக்கும் சம்பவம்..

Nov 25, 2024, 12:36 PM IST

google News
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், 17 வருடத்திற்கு பின் இசையமைப்பாளர் ஒருவர் அஜித் படத்தில் இணைந்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், 17 வருடத்திற்கு பின் இசையமைப்பாளர் ஒருவர் அஜித் படத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், 17 வருடத்திற்கு பின் இசையமைப்பாளர் ஒருவர் அஜித் படத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். துணிவு படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அஜித் குமாரின் அடுத்த படம் மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தள்ளிப்போன விடாமுயற்சி

இதையடுத்து, அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இந்தப் படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனால், அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் புயல் வேகத்தில் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

குவிந்த பிரபலங்கள்

குட் பேட் அக்லி படத்தில் அஜித் 3 வேடங்களில் தோற்றமளிக்கும் புகைப்படத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், அஜித் இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கலாம் என பரவலாகப் பேசப்படுகிறது.

அஜித்திற்கு ஜோடியாக இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா, எஸ்.ஜே.சூர்யா, சுனில், நஸ்லன் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

டிஎஸ்பி இல்லையா?

மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, கங்குவா திரைப்படத்தின் இசை மக்களுக்கு இரைச்சலாக இருப்பதாக கூறிய நிலையில், அந்தப் படத்தின் சத்தத்தை குறைக்குமாறு தயாரிப்பாளர் கூறி இருந்தார். மேலும், மைத்ரி மூவிஸ் தயாரித்துள்ள பான் இந்தியா திரைப்படமான புஷ்பா 2விலும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்தார். பின் சில நாட்களாக அந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக கூறினர்.

இதற்கிடையில் தற்போது, அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலிருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறியுள்ளது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பரவும் வதந்தி

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தருக்கு திருப்திகரமானதாக இல்லாததால், அவரை படத்திலிருந்து நீக்கியதாகவும் சில தகவல்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்தரின் முதல் படமான மார்க் ஆண்டனிக்கும் ஜி.வி. இசையமைத்த நிலையில், அடுத்த படத்திற்கும் அவரது உதவியை நாடியுள்ளார். அதுமட்டுமின்றி. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற காரணத்தினாலும் ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜி.வி. பிரகாஷிற்கு முன்னதாக அனிருத்தை இயக்குநர் நாடியதாகவும், ஆனால் அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் இந்த வாய்ப்பை மறுத்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

17 வருடம் பின் இணையும் ஜி.வி.பிரகாஷ்

தற்போது வசூலில் வெற்றிநடை போடும் அமரன், லக்கி பாஸ்கர் என 2 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது முழு மூச்சுடன் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். அந்த செய்தி உறுதி செய்யப்பட்டால், கீரிடம் படத்திற்கு பின் 17 ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அஜித் படத்திற்கு இசையமைப்பார்.

ஏற்கனவே, சோசியல் மீடியாவில் கடவுளே அஜித்தே என அவரது ரசிகர்கள் சம்பவம் செய்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் நவீன் குட் பேட் அக்லி பொங்கலுக்கு திரைக்கு வரும் என்ற அப்டேட்டை கொடுத்து மேலும் குஷியாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி