Top DSP Songs: கங்குவா ரிலீஸுக்கு முன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ-top trending devi sri prasad songs you should listen before kanguva release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Dsp Songs: கங்குவா ரிலீஸுக்கு முன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ

Top DSP Songs: கங்குவா ரிலீஸுக்கு முன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 19, 2024 10:05 AM IST

Top DSP Songs: கங்குவா படம் ரிலீஸுக்கு முன் ரசிகர்களால் டிஎஸ்பி என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த டாப் ட்ரெண்டிங் பாடல்கள் பார்க்கலாம்.

Top DSP Songs: கங்குவா ரிலீஸுக்கு முன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ
Top DSP Songs: கங்குவா ரிலீஸுக்கு முன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ

இவரது இசையமைப்பில் விரைவில் வெளியாக இருக்கும் தமிழ் படமாக கங்குவா உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ரசிகர்கள் கவர்ந்த டாப் ட்ரெண்டிங் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்

ஃபயர் பாடல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஃபயர் பாடல் என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். வி.எம். மகாலிங்கம், செந்தில் கணேஷ், சென்பகராஜ், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

புஷ்பா புஷ்பா

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 படத்தில் இடம்பிடித்திருக்கும் புஷ்பா புஷ்பா பாடலை விவேகா எழுதியுள்ளார். நகாஷ் அசிஸ், தீபக் ப்ளூ ஆகியோர் இந்த பாடல் பாடியுள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புஷ்பா 2 டிசம்பரில் வெளியாகிறது.

ஊ சொல்றியா

இந்தியா முழுவதும் ட்ரெண்டான இந்த பாடல் புஷ்பா படத்தில் இடம்பிடித்துள்ளது. பாடலில் சமந்தாவின் குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விவேகா பாடல் வரிகளை எழுத நடிகை ஆண்ட்ரியா இந்த பாடலை பாடியுள்ளார்

சூடான

புஷ்பா 2 படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக இது அமைந்துள்ளது. விவேகா பாடல் வரிகளை எழுத ஷ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளார். இதன் லிரில் விடியோவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவின் நடனம் வைரலானது

புல்லட் பாடல்

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியான வாரியர் படத்தில் இந்த பாடல் இடம்பிடித்துள்ளது. பாடலில் ராம் போத்னேன், கீர்த்தி ஷெட்டி ஆகியோரின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விவேகா பாடல் வரிகளை எழுத, நடிகர் டி.ஆர். சிலம்பரசன், ஹரிப்பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

ஸ்ரீவள்ளி

புஷ்பா படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடல் நடிகை ராஷ்மிகாவை நேஷனல் க்ரஷ் ஆக்கியது. அல்லு அர்ஜுன் அசத்தலான நடனமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. விவேகா எழுதிய இந்த பாடல் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்த பாடலாக இது அமைந்துள்ளது.

பாக்காத

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துகுமார் எழுத திப்பு, சீனிவாசன், சுமங்கலி ஆகியோர் பாடியுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சிறந்த மெலடி பாடலாக இது அமைந்துள்ளது.

கண்மூடி திறக்கும்போது

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த கிளாசிக் மெலடி பாடலை நா. முத்துக்குமார் எழுத, தேவி ஸ்ரீ பிரசாத் பாடியுள்ளார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த பாடல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த அற்புத மெலடியாக இருக்கிறது

புது மெட்ரோ ரயில்

சாமி ஸ்கொயர் படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலை நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் வரிகள் எழுதி அவரே இசையமைத்துள்ளார்.

விசில் பாடல்

தி வாரியர் படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடல் விசில் பாடல் உள்ளது. விவேகா இந்த பாடல் வரிகளை எழுத அந்தோணி தாசன், ஸ்ரீ நிஷா ஜெயசீலன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.