Good Bad Ugly: படப்பிடிப்பு தொடங்கியவுடன் நடந்த பிசினஸ்.. விற்பனையான குட் பேட் அக்லி ஓடிடி உரிமம்!
Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. 95 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உரிமையைப் பெற்று உள்ளது.

படப்பிடிப்பு தொடங்கியவுடன் நடந்த பிசினஸ்.. விற்பனையான குட் பேட் அக்லி ஓடிடி உரிமம்!
Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ’’குட் பேட் அக்லி’’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அதனை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தமிழில் பார்த்து உள்ளனர்.
2025 ஆம் ஆண்டு ஜூன் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ளதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு உள்ளது.