தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sathyaraj: அப்பிராணியாக கலாய்ப்பது முதல் அநாயாச நடிப்பு வரை.. சத்யராஜ் என்னும் பன்முக நடிகரின் கதை

Sathyaraj: அப்பிராணியாக கலாய்ப்பது முதல் அநாயாச நடிப்பு வரை.. சத்யராஜ் என்னும் பன்முக நடிகரின் கதை

Marimuthu M HT Tamil

Oct 03, 2024, 06:10 AM IST

google News
Sathyaraj: அப்பிராணியாக கலாய்ப்பது முதல் அநாயாச நடிப்பு வரை.. சத்யராஜ் என்னும் பன்முக நடிகரின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.
Sathyaraj: அப்பிராணியாக கலாய்ப்பது முதல் அநாயாச நடிப்பு வரை.. சத்யராஜ் என்னும் பன்முக நடிகரின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.

Sathyaraj: அப்பிராணியாக கலாய்ப்பது முதல் அநாயாச நடிப்பு வரை.. சத்யராஜ் என்னும் பன்முக நடிகரின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.

Sathyaraj: தமிழ் சினிமாவில் சைடு வில்லனாக வாழ்க்கையைத் தொடங்கி மெயின் வில்லனாக வளர்ந்து ஹீரோவாகி தற்போது வரை முக்கிய நடிகராக வலம் வருபவர்கள் குறைவு. அதில் முக்கியானவர், நடிகர் சத்யராஜ். இவருக்கு மேற்கூறிய அனைத்து இலக்கணங்களும் கச்சிதமாகப் பொருந்தும்.

யார் இந்த சத்யராஜ்?:

சத்யராஜின் இயற்பெயர் ரங்கராஜ். இவர் 1954ஆம் ஆண்டு இதே தேதியில் (அக்டோபர் 3) கோவையில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சுப்பையா, தாய் நாதம்பாள். என்னதான் மருத்துவர் வீட்டில் மூத்த மகனாகப் பிறந்தாலும் சத்யராஜூக்கு நடிகராகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. இதற்காக கல்லூரி படிப்பை முடித்தவுடன் சென்னைக்குச் சென்று, அன்னக்கிளி படப்பிடிப்புத்தளத்துக்குச் சென்று நடிகர் சிவகுமாரை சந்தித்து வாய்ப்புத்தேடியுள்ளார். ஆனால், அவர் நடிகர் சத்யராஜுக்கு உரிய அறிவுரைகளைக் கூறி, ஊர் திரும்ப வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் விடாப்பிடியாக சினிமாவில் வாய்ப்புதேடி அலைகிறார், நடிகர் சத்யராஜ். பின், தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் அனுப்பும் பணத்தைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் செலவுகளை சமாளித்துக்கொண்டு சென்னையில் இருந்து வாய்ப்புத் தேடுகிறார், நடிகர் சத்யராஜ். அப்போது அவருக்குக் கிடைத்த வாய்ப்பு தான், 1978ஆம் ஆண்டு சட்டம் என்னும் கையில் படத்தில் அவரை வில்லன் நடிகராக்கியது. இப்படி படிப்படியாக 75 படங்களில் வில்லன் நடிகராக நடித்த பின், சாவி என்னும் படத்தில் ஹீரோவாகிறார், நடிகர் சத்யராஜ்.

சத்யராஜின் அசுர வளர்ச்சி:

1985ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்தாலும், இவர் பேசிய தகடு தகடு என்னும் வசனம் தமிழ்நாடு முழுக்க சத்யராஜின் பெயரை கொண்டு சேர்த்தது எனலாம். அதன்பின், மிஸ்டர் பாரத், கடலோர கவிதைகள், பாலைவன ரோஜாக்கள், பூவிழி வாசலிலே, சின்னத்தம்பி பெரியதம்பி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, வேதம் புதிது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சின்னப்ப தாஸ், மல்லுவேட்டி மைனர், நடிகன், திருமதி பழனிச்சாமி, அமைதிப்படை, தாய் மாமன், மலபார் போலீஸ், மிலிட்டரி, அடிதடி, மகாநடிகன், இங்கிலீஷ்காரன், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, வெங்காயம், நண்பன், சென்னை எக்ஸ்பிரஸ், நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ; தலைவா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பாகுபலி 1, பாகுபலி 2,கடைக்குட்டி சிங்கம், கனா, லவ் டுடே வரை, நடிகர் சத்யராஜ் மேற்கூறிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

சத்யராஜுக்குப்பெயர் பெற்றுத்தந்த படங்கள்:

சீர்திருத்தவாதி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்தார், நடிகர் சத்யராஜ். வேதம் புதிது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நடிகன், ராஜா ராணி, கனா ஆகியப் படங்களில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது பெற்றார், நடிகர் சத்யராஜ். தங்கர் பச்சான் இயக்கிய ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் மாதவ படையாட்சி கதாபாத்திரத்தில் நடித்ததற்கு, விஜய் டிவியின் விருதினைப் பெற்றார், சத்யராஜ்.

தனக்கென ஒரு பாணி:

பொதுவாக ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். நடிகர் சத்யராஜுக்கு ஸ்டைலே அப்பிராணிபோல இருந்து கலாய்ப்பது தான். இவரது படங்களில் காமெடி மிக முக்கிய அம்சமாக இருக்கும். 90-களில் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் நடிகர் கவுண்டமணியுடன் சேர்ந்து அடித்த ஒவ்வொரு காமெடிக்காட்சிகளும் சிரிக்கவைக்கும் ரகம். அதேபோல் 2000ன் பின்பகுதியில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடிக் காட்சிகள், பெரும்பாலும் பேசப்பட்டவை.

90ஸ் மற்றும் 2k கிட்ஸ்களின் நாயகன்:

என்னதான் சத்யராஜ் பல படங்களில் நடித்தாலும் மகாநடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பன், பாகுபலி 1, பாகுபலி 2, லவ் டுடே ஆகியப் படங்களில் நடித்ததன் மூலம் 90-கள் மற்றும் 2000-களில் பிறந்த குழந்தைகளின் மனதில் மறக்கமுடியாதவராக இருந்தார், நடிகர் சத்யராஜ்

சத்யராஜின் குடும்பம்: நடிகர் சத்யராஜ் 1979ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு சிபிராஜ், திவ்யா ஆகிய இருகுழந்தைகள் உள்ளனர். இதில் சிபிராஜ் நடிகராகவும், திவ்யா மருத்துவராகவும் உள்ளனர்.

இப்படி சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் சத்யராஜுக்கு இன்று பிறந்தநாள். இன்று அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. HBD Sathyaraj

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி