Baahubali: பாகுபலி வில்லனுக்கு பாடம் எடுத்த தமிழ் நடிகர்கள்.. இத்தனை ஆண்டுக்குப் பின் ரகசியத்தை சொன்ன ராணா..-actor rana daggubati share some interesting news in baahubali shooting - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baahubali: பாகுபலி வில்லனுக்கு பாடம் எடுத்த தமிழ் நடிகர்கள்.. இத்தனை ஆண்டுக்குப் பின் ரகசியத்தை சொன்ன ராணா..

Baahubali: பாகுபலி வில்லனுக்கு பாடம் எடுத்த தமிழ் நடிகர்கள்.. இத்தனை ஆண்டுக்குப் பின் ரகசியத்தை சொன்ன ராணா..

Malavica Natarajan HT Tamil
Sep 30, 2024 09:13 PM IST

Baahubali: பாகுபலி படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு தமிழ் சரியாக தெரியாது என்றும் அந்த சமயத்தில் நாசரும் சத்யராஜும் டியூஷன் எடுத்தார்கள் என்றும் நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.

Baahubali: பாகுபலி வில்லனுக்கு பாடம் எடுத்த தமிழ் நடிகர்கள்.. இத்தனை ஆண்டுக்குப் பின் ரகசியத்தை சொன்ன ராணா..
Baahubali: பாகுபலி வில்லனுக்கு பாடம் எடுத்த தமிழ் நடிகர்கள்.. இத்தனை ஆண்டுக்குப் பின் ரகசியத்தை சொன்ன ராணா..

பாகுபலி

இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்டத் திரைப்படங்கள் வந்திருக்கலாம் ஆனால் அவற்றை எல்லாம் கடந்து, பிரம்மாண்டம் என்றாலே பாகுபலி தான் என ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி திரைப்படம் .

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமொளியின் பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் மூலம் பிரபாஸ் பான் இந்தியா நடிகரானார். மாபெரும் வெற்றி அடைந்த இந்தப் படத்தில் நாஸர் , சத்யராஜ் , ரம்யா கிருஷ்ணன் , தம்மனா , அனுஷ்கா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

வரவேற்பால் சுற்றுலாத் தளமான செட்

பாகுபலி முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைந்து இருந்தது. படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படத்திற்காகப் போடப்பட்ட செட் அப்படியே வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை சுற்றுலா தளமாக மாற்றி மக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.

பாகுபலி 3 எப்போது?

பாகுபலி , பாகுபலி தி கன்க்லூஷன் படங்களைத் தொடர்ந்து அந்தப் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். இதுகுறித்து பதிலளித்த படத்தின் இயக்குநர் ராஜமெளலி, " பாகுபலி படத்தின் மூன்றாம் பகுதியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். நான் அதற்காக தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்து வருகிறேன்.

அது நடக்க சிறிது காலம் தேவைப்படும். பாகுபலி மூன்றாம் பாகம் குறித்து சில அற்புதமான அறிவிப்பு நீங்கள் எதிர்ப்பாக்காத சரியான நேரத்தில் வரும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் " என்றார் .

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராணா டகுபதி, பாகுபலி படப்பிடிப்பின் போது நடந்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்தத் தகவலை இதற்கு முன் எங்கும் கூறியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாகுபலி வில்லனுக்கு பாடம் எடுத்த தமிழ் நடிகர்கள்

அதில், பாகுபலி திரைப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் படத்திற்கான வசனங்களை மிகவும் சுலபமாக பேசி விட்டேன். ஏனெனில் எனக்கு தெலுங்கு தெரியும் என்பதால். ஆனால், தமிழ் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதினார். பல வசனங்கள் நீளமானவை. அவர் எழுதியிருந்தது எனக்கு புதிதாக இருந்தது. படிக்கவும் பேசவும் மிகவும் கஷ்டப்பட்டேன். 

அப்போது, நடிகர்கள் நாஸரும், சத்யராஜூம் எனவுக்கு மிகவும் உதவி செய்தனர். அவர்கள் இருவரும் மதன் கார்க்கி எழுதி கொடுத்த வசனங்களை சரியாக பேச எனக்கு பல பயிற்சிகளை அளித்தனர். அதற்காக இருவரும் சேர்ந்து எனக்கு டியூஷன் எடுத்தனர் எனக் கூறியுள்ளார். 

மேலும், தமிழில் வெளியான திரைப்படங்கலளில் நாயகன் படம் மிகவும் பிடித்தமான ஒன்று. நடிகர் கமல் ஹாசன் மிக அருமையாக நடித்திருப்பார் எனக் கூறியிருந்தார். இந்த மொத்த பேட்டியையும் அவர் தமிழில் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.