தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  19 Years Of Englishkaran: படம் முழுக்க காமெடி.. கடைசியில் மெசேஜ்.. ஹிட்டடித்த இங்கிலீஷ்காரன்

19 Years Of Englishkaran: படம் முழுக்க காமெடி.. கடைசியில் மெசேஜ்.. ஹிட்டடித்த இங்கிலீஷ்காரன்

Marimuthu M HT Tamil
Jun 24, 2024 10:35 AM IST

19 Years Of Englishkaran: படம் முழுக்க காமெடி மற்றும் கடைசியில் மெசேஜ் வைத்து ஹிட்டடித்த இங்கிலீஷ்காரன் திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

19 Years Of Englishkaran: படம் முழுக்க காமெடி.. கடைசியில் மெசேஜ்.. ஹிட்டடித்த இங்கிலீஷ்காரன்
19 Years Of Englishkaran: படம் முழுக்க காமெடி.. கடைசியில் மெசேஜ்.. ஹிட்டடித்த இங்கிலீஷ்காரன்

19 Years Of Englishkaran: சத்யராஜ், நமீதா, வடிவேலு, மதுமிதா சிவபாலாஜி மற்றும் சந்தானம் ஆகியோர் நடிக்க, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கி 2005ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி வெளியான திரைப்படம் தான், இங்கிலீஷ்காரன். இப்படத்தில் வடிவேலு மற்றும் சத்யராஜ் இணைந்து செய்யும் காமெடி, சத்யராஜ் மட்டும் தனியாக இருந்து செய்யும் அலப்பறைகள் கிச்சுகிச்சுமூட்டின. என்னம்மா கண்ணு, மகாநடிகன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சத்யராஜ் - இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூட்டணி இப்படத்தில் மூன்றாவது முறையாக இணைந்து, இப்படமும் கமெர்ஷியல் ஹிட்டானது.

இங்கிலீஷ்காரன் திரைப்படத்தின் கதை என்ன?

மிகவும் கலாட்டாவான பலரைக் கலாய்க்கும் நபராக வலம் வருபவர், தமிழரசன். இவர் கல்லூரி ஒன்றில் படிக்கும் சந்தியா என்ற பெண்ணை ஆரம்பத்தில் லவ் பண்ணுவது போன்று டார்ச்சர் பண்ணுகிறார். அதேசமயம், பாலா என்ற அவரது கல்லூரியில் படிக்கும் நபரும் சந்தியாவைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தமிழரசனின் காதலை வெறுப்பதற்காக, பாலாவின் காதலைத் தேர்ந்து எடுக்கிறார், சந்தியா. பின் இருவரும் உண்மையிலேயே காதலிக்கின்றனர். சந்தியாவின் தந்தை பழமைவாத தந்தை, அவரை, ஒரு ரவுடியின் மகனுக்கு மணமுடித்துக்கொடுக்க, ஒருபக்கம் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறார்.

சிறிதுநாட்களுக்குப் பின், தமிழரசன், பாலாவின் காதலுக்கு உதவவே இவ்வாறு நடந்துகொண்டார் என்பது சந்தியாவுக்குத் தெரிந்துவிடுகிறது. சந்தியா, தமிழரசனை தன் அக்காவைக் கொன்ற கொலைகாரன் என்று கூறுகிறார். அப்போது, பாலா அவர் நல்லவர் என்று நடந்ததை ஃப்ளாஷ்பேக்காக கூறுகின்றார்.

இதுபற்றி பாலா சந்தியாவிடம், ’உன் அக்கா மகேஸ்வரியை தமிழரசன் கல்யாணம் செய்ததே அவரை ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் ஆக்க வேண்டும் என்பதற்காகத் தான் எனவும்,  ஒரு கட்டத்தில் மகேஸ்வரியை அழைத்துக்கொண்டு சென்னையில் நடந்த ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியதும் சொந்தபந்தங்கள் இது பற்றி, தமிழரசனின் அம்மாவிடம் கூறியுள்ளனர். அப்போது மாடியில் இருந்து வழுக்கிவிழும் மகேஸ்வரிக்கு சிகிச்சைக்குச் சென்ற மருத்துவமனையில், அவரால் இனிமேல் ஓட முடியாது என்ற பொய் ரிப்போர்ட்டை தமிழரசனின் அம்மாவின் வற்புறுத்தலால் மருத்துவர் சொல்கிறார். இதனை வெளியில் இருந்து கேட்ட மகேஸ்வரி, வெறுப்பில் வீட்டில் யாரும் இல்லாதநேரம் பார்த்து அரளி விதைகளை அருந்திவிட்டார். இதுதெரியாமல் தான், தமிழரசனால் மகேஸ்வரியைக் காப்பாற்றமுடியவில்லை என்றும்; உன் அக்கா மகேஸ்வரி சாகும்போது, தன் தங்கையை  பிரபல பாடகி ஆக்கவேண்டும் என்று தன் கணவர் தமிழரசனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு உயிரிழக்கிறார். அதில் இருந்து உன் பாடலை எப்படியாவது வெளியில் கொண்டுவர இசையமைப்பாளர் தேவா வரை சென்று தமிழரசன் உதவி’ கேட்டிருப்பதைக் கூறுகிறார். 

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் மனம்மாறுகிறார் சந்தியா. அப்போது, சந்தியாவின் தந்தை அவரை ஒரு ரவுடியின் மகனுக்குத் திருமணம் முடித்து வைக்க ஏற்பாடுகள் செய்தபோது, சந்தியா சென்னைக்கு சென்றுவிடுகிறார். கல்யாணம் நின்றுவிடுகிறது. இதனால், அவரைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடியின் மகன். சென்னையில் சந்தியாவின் முதல்பாடல் பதிவினைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். அங்குசெல்லும் தமிழரசன் அதை தடுத்து முறியடிக்கிறார். இறுதியில் சந்தியா பாடிய பாடல் வெளியாகி, அவர் மிகப்பெரிய பின்னணி பாடகி ஆகிறார். 

தமிழரசன் வறுமையான குடும்பத்தில் பிறக்கும் திறமையான பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்.  படம் முடிவடைகிறது. 

இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் நடித்தவர்களின் விவரம் என்ன?:

இப்படத்தில் தமிழரசனாக சத்யராஜூம், மகேஸ்வரியாக நமீதாவும் நடித்திருந்தனர். தீப்பொறி திருமுகமாக வடிவேலுவும், சந்தியாவாக மதுமிதாவும், பாலாவாக சிவா பாலாஜியும், பாலாவின் நண்பராக சந்தானமும் தமிழரசனின் அம்மாவாக சத்யப் பிரியாவும், சந்தியாவின் பழமைவாதி அப்பாவாக காதல் தண்டபாணியும் நடித்து இருந்தனர். நெருப்பு நீலமேகமாக சிங்கமுத்துவும் தீப்பொறி திருமுகத்தின் கூட்டாளிகளாக போண்டோ மணி, அல்வா வாசு, கிருஷ்ணமூர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் ஜோடியாக நடித்த மதுமிதாவும் சிவா பாலாஜியும், அதன்பின் நிஜவாழ்க்கையிலும் ஜோடியாகினர். 

இங்கிலீஷ்காரன் திரைப்படத்தின் வெற்றிக்கு உதவிய வடிவேலு காமெடி:

மகேஸ்வரியை தமிழரசன் மணமுடிக்காமல், இருக்க தீப்பொறி திருமுகம் தடுக்க பிளான் போட்டு சொதப்பும் காமெடி காட்சிகள் படத்தைத் தாங்கிப் பிடித்தன.

இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் இசை:

இங்கிலீஷ்காரன் திரைப்படத்தின் இசையை தேவா செய்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். இப்படத்தில் வரும் யாரது யாரது என்னும் பாடலும், கஜினிமுகமது பாடலும் ஹிட்டடித்தது.