Sathyaraj: ‘பிளேபாயா சுத்தின காலம் அது.. அப்பவே நம்மல்லாம் அப்படி..’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்!-tamil actress rekha and sathyaraj latest interview about this love stories - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sathyaraj: ‘பிளேபாயா சுத்தின காலம் அது.. அப்பவே நம்மல்லாம் அப்படி..’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்!

Sathyaraj: ‘பிளேபாயா சுத்தின காலம் அது.. அப்பவே நம்மல்லாம் அப்படி..’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்!

Aug 20, 2024 12:26 PM IST Kalyani Pandiyan S
Aug 20, 2024 12:26 PM , IST

Sathyaraj: அப்படி இல்லை என்றால், ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.இந்த காலத்தில் எல்லோரும் செல்போன் மூலம் கடலை போட்டுக் கொள்கிறார்கள். - சத்யராஜ்!

Tamil Actress Rekha: நடிகை ரேகாவும், நடிகர் சத்யராஜூம் இன்றைய கால காதல் குறித்து லிட்டல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தனர். ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லைஅந்த பேட்டியில் சத்யராஜ் பேசும் பொழுது, “நான் கல்லூரியில் மிகப்பெரிய பிளேபாயாக தான் இருந்தேன். 

(1 / 6)

அப்படி இல்லை என்றால், ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.இந்த காலத்தில் எல்லோரும் செல்போன் மூலம் கடலை போட்டுக் கொள்கிறார்கள்.   

(2 / 6)

ஆனால், அந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை ஒருவரையொருவர் தொடர்பு கொள்வது என்பது மிக மிக அரிதாக இருந்தது. கஷ்டமாக இருந்தது. அதனால் நாங்களே எங்களுக்குள்ளேயே கற்பனையிலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருப்போம்.   

(3 / 6)

அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. அந்த காலத்தில் எல்லாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒரு பெண் நமக்காக கிடைப்பாள்” என்று பேசினார்.  

(4 / 6)

பர்ஃபெக்ட்டான கணவர் என்று யாரையும் சொல்ல முடியாது நடிகை ரேகா பேசும் போது, “இங்கு பர்ஃபெக்ட்டான கணவர் என்றும் யாரையுமே சொல்ல முடியாது. ஏதாவது ஒரு குறை நிச்சயமாக அவரிடத்தில் இருக்கும். மிகவும் பர்ஃபெக்ட்டான கணவர் கிடைப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு  கிடைக்கலாம். யாரும் யாரையும் இங்கு எடை போட முடியாது.  

(5 / 6)

அதேபோல நாமும் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் இருந்து விடவும் கூடாது. அனுசரித்து, குறைகளை ஏற்றுக் கொண்டு செல்லும் பொழுது மட்டுமே, அந்த உறவு நீடித்து நிற்கும். அது ஒரு கடல் அலை போல, அப்படித்தான் அந்த உறவு அமையும். எனக்கு இப்படித்தான் கணவர் வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் உங்களுக்கென்று எழுதப்பட்டது தான் உங்களுக்கு கிடைக்கும். இந்த விஷயத்தில் நான் மிகவும் லக்கி என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் என்னுடைய கணவர் என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகள் உள்ளிட்டவற்றில் தலையிட மாட்டார். அவர் உண்டு; அவரது தொழில் உண்டு என்று அவர் அவரது வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பார். சத்யராஜுக்கும் அதேபோலத்தான் அவரது மனைவி தொழில் சார்ந்த முடிவுகளில் இருந்து விலகி அனுசரித்துச் சென்றிருக்கிறார். அதனால்தான் அவரால் இப்படி வேலை செய்ய முடிகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்