"பச்சத் துரோகி.. கைக்கூலி.. அவனுக்கு சினிமாவுல சான்ஸ் கொடுத்ததே நான் தான்" ஆக்ரோஷத்தில் சீறிய டைரக்டர்
Nov 08, 2024, 10:34 AM IST
தான் சினிமாவில் நடிகராக அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஒருவரே தன் பட வாய்ப்புகளைத் தடுப்பதாக இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மிக காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார்.
தென் மாவட்டங்களில் உறவுகளுக்குள் நடக்கும் பாசப் போராட்டங்களையும், கௌரவத்தின் பெயரால் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் படம் 'மதயானைக் கூட்டம்'. இந்தப் படத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கி இருப்பார்.
இதைத் தொடர்ந்து அவர் ராணவனக் கோட்டம் படத்தையும் இயக்கினார். அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் திரைப்படத்திலும் முக்கிய பங்கு வகித்திருப்பார். இந்நிலையில். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஒருவரை திட்டி போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பச்சை துரோகி
அந்தப் பதிவில், "மதயானை கூட்டம் படத்தை இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். அவன் வேறு யாருமல்ல அவனை நான் நடிகனாக்கினேன். பச்சை துரோகி.. என் எதிரிக்கு கைகூலியாக செயல்பட்டிருக்கிறான். இதை கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை" என மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதனால், சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குநரின் பட வாய்ப்புகளை தடுக்கும் நடிகர் யார்? அவர் ஏன் பொதுவெளியில் இப்படி பதிவிட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாலு மகேந்திரா டூ வெற்றிமாறன்
மறைந்த பழம்பெறும் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றவர் விக்ரம் சுகுமாரன். அந்த சமயத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். இந்நிலையில் தான், தேசிய விருது பெற்ற வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் பெரும்பாலான முக்கிய வேலைகளில் அவருக்கு உதவி இருப்பார் விக்ரம் சுகுமாறன்.
மதயானைக் கூட்டம்
ஆடுகளம் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைத் தொடர்ந்து அவர், கதிர், கலையரசன், ஓவியா, பேபி, வேல ராமமூர்த்தி ஆகியோரை வைத்து மதயானைக் கூட்டம் எனும் படத்தை 2013ம் ஆண்டு இயக்கி வெளியிட்டிருப்பார்.
இந்தப் படத்தை ஒரு தர்பபினர் சாதியப் படமாக பார்த்தாலும், பலரும் தென் மாவட்ட மக்களின் உறவுகளையும், உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும், மொய்யால் ஏற்படும் சிக்கல்கள் எப்படி குடும்பத்தையே அழிக்கிறது என்பதையும் அழகுற கூறி இருப்பதாக கூறியிருப்பர்.
ராவணக் கோட்டம்
இந்தப் படத்தை இயக்கியதற்குப் பின் அவர் வெகு நாட்களாக எந்தப் படமும் இயக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் கயல் ஆனந்தி, சாந்தனுவை வைத்து ராணவக் கோட்டம் எனும் திரைப்படத்தை இயக்கி இருப்பார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இதனால், தற்போது மீண்டும் அவர் அடுத்த படம் குறித்த வேலைகளில் கவனம் செலுத்த நினைத்த போது, அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்.
சினிமா வட்டாரத்தில் சலசலப்பு
இந்நிலையில், தான் அறிமுகப்படுத்திய நடிகர் ஒருவரே தன் பட வாய்ப்புகளை தடுத்து எனக்கு துரோகம் செய்துள்ளதாக காட்டமான பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஆனால், இவரது பதிவை பார்த்த பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியதால், விக்ரம் சுகுமாறன் இந்தப் பதிவை நீக்கி விட்டார். இருப்பினும் இவர் எந்த நடிகரை கூறுகிறார் என்பது தெரியாமல் பலரும் இச்சம்பவம் குறித்து விவாதித்து வருகின்றனர்,
டாபிக்ஸ்