பார்த்திபன் அலுவலகத்தில் நகை திருட்டு..அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், கங்குவாவுக்கு தடை! டாப் சினிமா செய்திகள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பார்த்திபன் அலுவலகத்தில் நகை திருட்டு..அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், கங்குவாவுக்கு தடை! டாப் சினிமா செய்திகள் இன்று

பார்த்திபன் அலுவலகத்தில் நகை திருட்டு..அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், கங்குவாவுக்கு தடை! டாப் சினிமா செய்திகள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 07, 2024 11:50 PM IST

பார்த்திபன் அலுவலகத்தில் நகை திருட்டு..அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், கங்குவாவுக்கு தடை கோரி வழக்கு, புஷ்பா 2 இசையமைப்பாளர் மாற்றம் உள்பட தமிழ் சினிமாவின் டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

பார்த்திபன் அலுவலகத்தில் நகை திருட்டு..அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், கங்குவாவுக்கு தடை! டாப் சினிமா செய்திகள் இன்று
பார்த்திபன் அலுவலகத்தில் நகை திருட்டு..அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், கங்குவாவுக்கு தடை! டாப் சினிமா செய்திகள் இன்று

அதேபோல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் சமந்தாவின் கம்பேக் ஆக சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே தமிழில் டாப் 10 சினிமா செய்திகள் இன்று எவை என்பதை பார்க்கலாம்.

கங்குவாவுக்கு தடை கோரி வழக்கு - நாளை வெளியாகும் தீர்ப்பு

வாங்கிய கடன் தொகையில் பாதிக்கு மேல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தாத நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸுக்கு தடை கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனால் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

காதலியை கரம் பிடித்த பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸில் ரெட் கார்டு வாங்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி தனது காதலி பூஜாவை கரம் பிடித்துள்ளார். இவரது திருமண புகைப்படம் வைரலாகும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பிரதீப் ஆண்டனி - பூஜா ஆகியோரின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

அனுஷ்காவின் புதிய பட போஸ்டர் வெளியீடு

அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கண்களில் கண்ணீர் , ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா இருக்கும் இந்த படத்துக்கு காதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. க்ரிஷ் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்

பாலிவுட் கான்களில் ஒருவரான சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மற்றொரு கான் நடிகரான ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பந்த்ரா காவல் நிலையத்துக்கு வந்த போன் அழைப்பில் ரூ. 50 லட்சம் தராவிட்டால் ஷாருக்கானை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தக் லைஃப் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. கமலின் பிறந்தநாளான இன்று படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படம் ஜூன் 5, 2025இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படத்துக்கு பின்னணி இசையமைப்பாளர் மாற்றம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் படத்துக்கு தற்போது தமன் பின்னணி இசை அமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. படத்தின் புரொமோஷனின் போது இதுபற்றி படக்குழுவினர்கள் வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.

நகை காணவில்லை என புகார் கொடுத்துவிட்டு வாபஸ் பெற்ற பார்த்திபன்

தனது அலுவலகத்தில் 12 சவரன் தங்க நகைகள் மாயமானதாக இயக்குநர், நடிகரான பார்த்திபன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மாயமான அந்த நகை பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணாவிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அவர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.

அமரன் படத்துக்கு எதிராக போராட்டம்

அமரன் படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக படத்துக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அமரன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சியில், உள்ள பிரபல தனியார் திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறுபான்மை முஸ்லீம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லாகட்டும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்ற நெப்போலியன் மகன் திருமணம்

நடிகரும், முன்னாள் எம்பியுமான நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமண விழாவில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர்கள் கார்த்தி, விதார்த், வசந்த் ரவி, பாண்டியராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

மகன் தனுஷின் திருமணம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ பகிர்ந்திருக்கும் நெப்போலியன், "எங்கள் முத்த மகன் தனுஷின் 8 ஆண்டுக்கால கனவு! இந்தியாவில் பிறந்தாலும், சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத காலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துகளாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.

ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் அப்டேட்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

தீபாவளி ரிலீஸாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், தற்போது காதலிக்க நேரமில்லை படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என ஜெயம் ரவி ஆர்வமாக உள்ளாராம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.