Neengal Kettavai: பாலு மகேந்திரா காவியம்.. எப்போதும் ஒலிக்கும் இளையராஜா.. மக்களுக்காக நீங்கள் கேட்டவை!
40 years Neengal Kettavai: இளையராஜா, பாலு மகேந்திரா இணைந்தால் அங்கே இசை விருந்துக்கு எந்த குறையும் இருக்காது. அப்படி மிகப்பெரிய கூட்டணியில் இவர்களும் சிறந்த கூட்டணி ஆவார். பாலு மகேந்திராவின் ஒன் அண்ட் ஒன்லி கமர்ஷியல் படமாக இருக்கும் நீங்கள் கேட்டவை வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.

40 years Neengal Kettavai: தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திரா பின்னாளில் இயக்குநராகவும் சில படங்களை இயக்கினார். வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் ஆஃப் பீட் கதையம்சத்தில் இருக்கும் பாலுமகேந்திராவின் படங்கள் தனித்துவம் வாய்ந்தவையாகவே அமைந்திருந்தன.
பாலு மகேந்திரா படங்கள் கதை, திரைக்கதை மட்டுமில்லாமல் மற்ற டெக்கினிக்கல் விஷயங்களும் பக்கவாக இருக்கும். இதுவே அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்தது. அதேபோல் பாலுமகேந்திராவால் இதுபோன்ற படங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதை உடைக்கும் விதமாகவும், குத்து பாடல், கவர்ச்சி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என ஜனரஞ்சக விஷயங்கள் கலந்த பக்காவான கமர்ஷியல் படமும் தன்னால் இயக்க முடியும் என அவர் உருவாக்கிய படம் நீங்கள் கேட்டவை.
1980 காலகட்டத்தில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த தியாகராஜன், தெலுங்கு நடிகரான பானு சந்தர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க சில்க் ஸ்மிதா, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். ஹீரோயினாக நடிகை அர்ச்சனா இந்த படத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டார். ஜெய்சங்கர் வில்லன் வேடத்தில் நடித்திருப்பார்.