தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காலத்திற்கு ஏற்ப மாறாமல் தொடர் சறுக்கலை சந்திக்கிறாரா பிரம்மாண்ட இயக்குநர்? அதிகரிக்கும் விமர்சனங்கள்..

காலத்திற்கு ஏற்ப மாறாமல் தொடர் சறுக்கலை சந்திக்கிறாரா பிரம்மாண்ட இயக்குநர்? அதிகரிக்கும் விமர்சனங்கள்..

Oct 19, 2024, 02:58 PM IST

google News
இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் 20 கோடி ரூபாயை செலவு செய்துள்ளாராம். இந்த தகவலால் அவர் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் 20 கோடி ரூபாயை செலவு செய்துள்ளாராம். இந்த தகவலால் அவர் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் 20 கோடி ரூபாயை செலவு செய்துள்ளாராம். இந்த தகவலால் அவர் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் 2, 3 படபிடிப்புகளைத் தொடர்ந்து, டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் எனும் படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கரால் பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட தமன், இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தாமதமாகும் கேம் சேஞ்சர்

இந்தியன் 2 திரைப்பட வெளியீட்டிற்கு நடுவே இப்படம் எடுக்கப்பட்டு வந்ததால், படப்பிடிப்பு தாமதமாகி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், வேள்பாரி நாவல், இந்தியன் 2 தோல்வி போன்றவை இயக்குநர் ஷங்கரை மிகவும் அப்செட் ஆக்கியது.

இதையடுத்து, ஷங்கர்- கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 3 படத்தை வெளியிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே சிக்கித் தவித்து வந்த ஷங்கர் ஒருவழியாக மீண்டும் கேம் சேஞ்சர் படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இந்தியன் 2 படத்தின் தோல்வியை சந்தித்த உடனே அடுத்த படத்தை வெளியிட்டால் அதன் தாக்கம் புதிய படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என எண்ணியும் ஷங்கர் படப்பிடிப்பை தாமதமாக்கியதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.

கசிந்த தகவல்

இந்நிலையில், ராம் சரண்- ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதில், இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு பாடலை எடுப்பதற்காக மட்டும் 2த கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடரும் விமர்சனங்கள்

இந்தத் தகவலால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார், பாய்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில் பாடல் வித்யாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக ஷங்கர் பல மெனக்கெடல்களை எடுத்து ரசிக்க வைத்திருப்பார். இந்த மெனக்கெடல்கள் அவரது தொழிலின் திறமையை காட்டும் அதே சமயத்தில் இந்தப் படத்திற்கு இது தேவை தானா என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.

தொழில்நுட்பம் வளர்ச்சி இல்லாத காலத்தில் கோடிக்கணக்காக செலவழிதகத்து ஒரு பாடலை படமாக்குவது என்பது வேறு. ஆனால், தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் தற்போது நம்மிடம் உள்ள நிலையில், எதற்காக இத்தனை கோடி பொருட் செலவையும் மக்களின் உழைப்பையும் வீணடிக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அத்துடன், ஷங்கரின் படங்கள் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், படத்தில் கதை இல்லாமல் வெறும் பிரம்மாண்டங்கள் மட்டும் படத்தில் இருந்தால் அது எப்படி ரசிகர்களை ஈர்க்கும் என கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், காலத்திற்கு தகுந்தார்போல ஒரு கலைஞன் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை என்றால், அவரது படைப்புகள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தை வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியிட தேவையான வேலையை பார்த்து வருகிறது படக்குழு.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி