Director Shankar: ஷங்கரின் கனவு படம்... இதெல்லாம் செட் ஆகாது... மாறிய முடிவால் வந்த ட்விஸ்ட்-actor surya and vikram join hands for director shankar upcomming movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Shankar: ஷங்கரின் கனவு படம்... இதெல்லாம் செட் ஆகாது... மாறிய முடிவால் வந்த ட்விஸ்ட்

Director Shankar: ஷங்கரின் கனவு படம்... இதெல்லாம் செட் ஆகாது... மாறிய முடிவால் வந்த ட்விஸ்ட்

Malavica Natarajan HT Tamil
Sep 26, 2024 06:02 PM IST

Director Shankar: இயக்குநர் ஷங்கரின் கனவு படமான வேள்பாரிக்கு ஹிந்தி நடிகர்களை தேர்வு செய்த நிலையில், தற்போது தமிழ் நடிகர்களை வைத்தே இந்தப் படத்தை இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

Director Shankar: ஷங்கரின் கனவு படம்... இதெல்லாம் செட் ஆகாது...  மாறிய முடிவால் வந்த ட்விஸ்ட்
Director Shankar: ஷங்கரின் கனவு படம்... இதெல்லாம் செட் ஆகாது... மாறிய முடிவால் வந்த ட்விஸ்ட்

நடிகர்களை ஈர்த்த பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமா கலைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று படம் என்பது பொன்னியின் செல்வன். இந்த நாவலை படமாக்குவது தொடர்பாக எம்.ஜி.ஆர்- சிவாஜி காலத்தில் இருந்தே பேச்சுவார்த்தை நடந்து வந்ததாம். பின் இந்தக் கதையில் நடிக்க தனக்கும் ஆர்வம் இருந்ததாக நடிகர் ரஜினி காந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இயக்குநர் மணிரத்னம் பல முன்னணி தமிழ் நடிகர்கள் கூட்டணியில் இரண்டு பாகங்களாக இந்தப் படத்தை எடுத்து முடித்தார். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கு அடுத்ததாக வரலாற்று திரைப்படங்கள் எடுப்பதற்கான ஆர்வம் இயக்குநர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதேசமயம், தங்கலான், கங்குவா போன்ற வரலாற்றை பேசும் படங்களும் அடுத்தடுத்து திரைக்கும் வரவுள்ளன.

ஷங்கரின் கனவு படம்

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், மதுரை எம்பி சு. வெங்கடேசனின் வேள்பாரி நாவலை படமாக்க எண்ணி அதற்கான காப்புரிமையை பெற்றார். இதையடுத்து இந்த நாவல் குறித்த பேச்சு சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியது.

இந்தப் படம் ஷங்கரின் கனவுப் படம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறி வந்த நிலையில், அந்த நாவலின் காட்சிகள் வேறு படத்தில் இடம் பெற்றுள்ளது. இது ஷங்கரை மிகவும் அப்செட்டாக்கி உள்ளது என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது கனவுப் படத்தை விரைந்து எடுக்க வேண்டும் என தீவிரமாக தயாராகி வருகிறாராம். மேலும், வேள்பாரி நாவலுக்கு காப்புரிமை வாங்கியுள்ளதால் அந்த நாவலில் உள்ள காட்சியை படமாக்கிய படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க உள்ளாராம்.

தமிழ் நடிகர்களுக்கு ஓகே

அதே சமயத்தில், வேள்பாரி படத்தில் நடிக்க முதலில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடமும், கன்னட நடிகர் யஷ்ஷிடமும் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாராம். ஆனால், இந்தப் படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களை வைத்தே இந்தப் படத்தை எடுக்கலாம் என எண்ணி உள்ளாராம்.

விரைவில் அறிவிப்பு

இதற்காக நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இவர்கள் இருவரும் படத்தில் நடிக்க சம்மதித்தால், இயக்குநர் ஷங்கர் தற்போது நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும், நடிகர் கமலின் இந்தியன் 3 படத்தையும் விரைந்து முடித்து விட்டு, வேள்பாரி படத்திற்கான அடுத்தகட்ட வேலைகளைப் பார்க்க உள்ளாராம்.

இந்த தகவல் வெளியான நிலையில், கோலிவுட் வட்டாரமே குஷியாகி உள்ளது.. பொன்னியின் செல்வன்., தங்கலான் போன்ற படத்தில் விக்ரம் தனது அசுர நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். அதேசமயம் சூர்யா கங்குவா படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அது படித்திற்கு மேலும் ஹைப்பை கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.