OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!-from indian 2 to chandu champion and the major films that successfully landed in ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

Marimuthu M HT Tamil
Aug 10, 2024 05:24 PM IST

OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கியப் படங்கள் குறித்துப் பார்க்கலாம்.

OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!
OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

பிர் ஆயி ஹசீன் தில்ருபா(Phir Aayi Hasseen Dillruba) - இந்தி:

ஜெயபிரத் தேசாய் இயக்கிய இப்படத்தில்,டாப்ஸி பன்னு மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு ரிலீஸான ’ஹசீன் தில்ருபா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்தப் படம் துரதிர்ஷ்டவசமான காதலர்களான ராணி காஷ்யப் மற்றும் ரிஷப் சக்சேனா ஆகியோரின் பயணத்தை விவரிக்கிறது. மேலும், இப்படத்தில் சன்னி கௌஷல் மற்றும் ஜிம்மி ஷெர்கில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் பெண்ணின் முக்கோணக்காதல் சிக்கல்களைப் பற்றிபேசுகிறது.

குட் சாடி(Ghudchadi) - இந்தி:

பினோய் கே. காந்தி இயக்கத்தில் சஞ்சய் தத், ரவீனா டன்டன், குசாலி குமார், பர்த் சம்தான், அருணா இரானி, ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், குட் சாடி. இதன் பொருள் குதிரை சவாரி என்பதாகும். இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவை ஆகியவையோடு படம் முழுக்க பயணிக்கிறது. இது வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 9) முதல் ஜியோ சினிமா பிரீமியத்தில் ரிலீஸாகியுள்ளது.

சந்து சாம்பியன்(Chandu Champion) - இந்தி:

கார்த்திக் ஆர்யன் நடித்த சந்து சாம்பியன் திரைப்படம் திரையரங்குகளில் வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமேஸான் பிரைம் வீடியோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கபீர் கான் இயக்கி, சஜித் நதியாட்வாலா மற்றும் கபீர் கான் இணைந்து தயாரித்துள்ள சந்து சாம்பியன் திரைப்படமானது, விளையாட்டு வீரரின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது. ஃப்ரீஸ்டைல் நீச்சலில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ’முரளிகாந்த் பெட்கரின்’ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட, இந்த படத்தில் கார்த்திக் ஆர்யன் சந்துவை என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்துக்கு திரையுலக உறுப்பினர்கள் முதல் பார்வையாளர்கள் வரை பாராட்டுக்களை அளித்து வருகின்றனர். கார்த்திக் ஆர்யன், கதாபாத்திரத்தின் வடிவத்தைப் பெற நம்பமுடியாத வகையில் தனது தோற்றத்தை மாற்றினார். இப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தியன் 2(Indian 2) - தமிழ், இந்தி, தெலுங்கு:

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் சஸ்பென்ஸ் பாணியிலானது. முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ ஜூலை 12ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. ’இந்தியன் 2’ படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடும் சேனாபதி என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள இப்படம் திரையரங்க வெளியீட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

லைஃப் ஹில் கய்(Life Hill Gayi): இந்தி:

இந்தப்படத்தில் வலைத்தொடரில் பிரபலமான நடிகர்களாக அறியப்படும் குஷா கபிலா மற்றும் திவ்யேந்து ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரேம் மிஸ்திரி இயக்கியுள்ளார். ஜஸ்மீத் சிங் பாட்டியா எழுதியுள்ளார். வினய் பதக், கபீர் பேடி, பாக்யஸ்ரீ, முக்தி மோகன் மற்றும் அதிதி கோவிட்ரிகர் ஆகியோரும் லைஃப் ஹில் கய் திரைப்படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இது வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 9) முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவெடுத்துள்ளது.

லிஸா ஃபிரான்கென்ஸ்டெயின் (Lisa Frankenstein) (ஆங்கிலம்) :

ஹாலிவுட் நடிகர்களான கேத்ரின் நியூட்டன், லிசா சோபெரானோ, ஜென்னா டேவிஸ் ஆகியோர் நடித்து செல்டா வில்லியம்ஸ் இயக்கிய திரைப்படம், ‘லிஸா ஃபிரான்கென்ஸ்டெயின்’. காமெடி மற்றும் திகில் கலந்த திரைப்படமான இப்படம் ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலேவெளியாகும் அனைத்துப் படங்களிலும் ஆங்கிலத்தில் சப் டைட்டிலும், சில படங்களுக்கு தமிழில் டப்பிங்கும் உள்ளன.

 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.