தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டக்கர் அடித்தாரா பெக்கர்? தீபாவளி ரேஸில் எந்த இடம்? ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இதோ!

டக்கர் அடித்தாரா பெக்கர்? தீபாவளி ரேஸில் எந்த இடம்? ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இதோ!

HT Tamil HT Tamil

Oct 31, 2024, 11:48 AM IST

google News
பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், அனைவரும் கவினுடன் வருவதால், அவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை நம்மி மட்டுமே கதையை நகர்த்துகிறார்கள்.
பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், அனைவரும் கவினுடன் வருவதால், அவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை நம்மி மட்டுமே கதையை நகர்த்துகிறார்கள்.

பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், அனைவரும் கவினுடன் வருவதால், அவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை நம்மி மட்டுமே கதையை நகர்த்துகிறார்கள்.

தீபாவளி பந்தயத்தில் மற்றுமொரு எதிர்ப்பு கொண்ட திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. கவின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இதோ. 

பங்காளி சண்டையில் எண்ட்ரி ஆகும் கவின்

பிச்சைக்காரராக வாழ்ந்து வரும் கவினுக்கு, நாம் மாளிகையில் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த நேரத்தில் நடிகர் ஒருவரின் பங்களாவில், எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். அதில் பங்கேற்கும் கவினுக்கு, அந்த பங்களா வாழ்க்கைப் பிடித்துப் போகிறது. இதற்கிடையில் அந்த பங்களா உறவுகளிடையே சொத்துப் பிரச்னை போகிறது. 5 வாரிசுகள், தனித்தனியே சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். 

உயில் மூலம் பெரும் பங்குகளை பெற்ற மகன் மட்டும் மாயமான நிலையில், அந்த மகனாக நடிக்க கவினை ‘புக்’ செய்கிறது அங்கிருக்கும் ஒரு பிரிவினர். அதற்கு குடும்ப வழக்கறிஞரும் உதவுகிறார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கும் உண்மை தெரியவர, அனைவரும் சேர்ந்து கவினை தீர்த்துக்கட்டி, சொத்தை தங்கள் வசமாக்க முடிவு செய்கிறார்கள். அந்த பணக்காரக் குடும்பத்தின் சதித்திட்டத்திலிருந்து, தப்பித்தாரா? சிக்கினாரா? இல்லை, அவர்களுக்கு பதிலடி கொடுத்து, மாளிகையை ஆண்டாரா? என்பது தான் ப்லடி பெக்கர்.

ஆவிப்படமா? ஆசைப்படமா?

ப்ளடி பெக்கராக, கவின் அசத்தியிருக்கிறார். அறிய முடியாத அளவிற்கு தோற்றத்தில் பொருந்தியிருக்கிறார். பாசம், திமிர், ஆசை, ஆர்வம் என அனைத்திலும் கலந்துகட்டி அடிக்கிறார் கவின். சொந்த மகன் என்று தெரியாமல், நடிக்க வந்த இடத்தில் கொலை செய்யப்படும் ரெடின் கிங்ஸ்லி, அதன் பின் தன்னுடைய இடத்திற்கு வரும் கவினிடம் ஆவியாக உரையாடுவதும், அவரை அலர்ட் செய்யும் இடங்களும் கலகலப்பானவை. 

பல இடங்களில் ‘நெல்சன் ஃபார்முலா ப்ளாக் காமெடி’ நல்லாவே வேலை செய்திருக்கிறது. குபீர் சிரிப்புகளும் தியேட்டரில் ஆங்காங்கே வந்து செல்கிறது. கதையென்று பார்த்தால், புதுமை இல்லை. அதே நேரத்தில், திரைக்கதையில் முடிந்த வரை நியாயம் சேர்க்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவபாலன். அதிலும் இரண்டாம் பாதி, ராக்கெட் ரகம்! ஜென் மார்ட்டின் இசை, போதுமாக இருக்கிறது. நிர்மலின் படத்தொகுப்பு, நியாயம் செய்துள்ளது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, கவினை பல கோணங்களில் நம்மிடம் கடத்திச் செல்கிறது. 

படத்தில் தொடக்கத்தில் காட்டும் கொடுமைக்கார சிறுவன், அவன் தான் கவின் என்று தொடங்கும் கதை, ஆனால், பின்பாதியில், அது கவின் இல்லை, என்கிற பெரிய ட்விஸ்ட். அதன் பின், தன்னுடன் சேர்ந்து பிச்சையெடுக்கும் பெண்ணுடன் திருமணம், குழந்தை என அடுத்தடுத்த ட்விஸ்ட். இதற்கிடையில் தன் மனைவியின் இறப்பின் பின்னணியில், அந்த பணக்கார குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்கிற ட்விஸ்ட். இப்படி, இரண்டாம் பாதியில் ‘ட்விஸ்ட்’ மயங்கள் குவிந்து கிடக்கிறது. ஆனால், முதல் பாதியில் அதற்கான பெரிய முடிச்சுகள் எதுவும் போடாததால், அதை அவிழ்ப்பதில் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும், அதை பாசப் போராட்டமாக நகர்த்துவதால், தப்பியது ப்ளடி பெக்கர்!

பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், அனைவரும் கவினுடன் வருவதால், அவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை நம்மி மட்டுமே கதையை நகர்த்துகிறார்கள். அது சில இடங்களில் கை கொடுக்கிறது. பல இடங்களில், அதுவே அயர்ச்சியை தருகிறது. தீபாவளி ரேஸில், பின்தங்காமல் ஓட ப்ளடி பெக்கருக்கும் ஒரு ட்ராக் கிடைக்கும் என்றே தெரிகிறது. இருந்தாலும்..!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை