கோடிகளுக்கு ஆசைப்பட்டு பல பாடிகளுடன் சிக்கிய கவின்..பிளாக் காமெடி! தீபாவளி ரேஸில் இணைந்த பிளடி பெக்கர்
பிளாக் காமெடி பாணியில் உருவாகியிருக்கும் பிளடி பெக்கர் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது. கோடிகளுக்கு ஆசைப்பட்டு பல பாடிகளுடன் கவின் சிக்கிக்கொள்ளும் விதமாக படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளது.

கோடிகளுக்கு ஆசைப்பட்டு பல பாடிகளுடன் சிக்கிய கவின்..பிளாக் காமெடி! தீபாவளி ரேஸில் இணைந்த பிளடி பெக்கர்
டிவி நடிகரான கவின் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் நடித்திருக்கும் புதிய படமான பிளடி பெக்கர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
பிளாக் காமெடி கதை
கடந்த சில நாள்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருக்கும் பிளடி பெக்கர் படத்தில் கவின், ரெடிங்க் கிங்ஸ்லீ உள்பட பலரும் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநரும், நெல்சனும் உதவியாளருமான சிவபாலன் முத்து குமார் இயக்கியுள்ளார்.
