பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த பஞ்சாயத்து.. கதறி அழும் ஜாக்குலின்.. சூடு பிடித்த பிக்பாஸ்..
Oct 08, 2024, 09:51 AM IST
பெண்கள் அணியின் சார்பாக ஜாக்குலின் விளையாட சென்றால் அது டீமிற்கு நல்லதல்ல என சுனிதா ஜாக்குலினிடம் நேரடியாகவே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8ன் முதல் நாள், முதல் எலிமினேஷ், அடுத்த வாரம் வெளியேறப் போகும் நபர்களுக்கான நாமினேஷன் என நேற்று பரபரப்பாக சென்றது. இதையடுத்து, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
முதல் டாஸ்க்
அதில், ஆண்கள் vs பெண்கள் என்ற போட்டியில், ஆண்கள் அணி சார்பாக விளையாட ஆண்கள் வீட்டிலிருந்து ஒரு நபர் பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் அணி சார்பாக விளையாட ஒரு நபர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் எந்த நபர் ஆண்கள் வீட்டிற்கும் பெண்கள் வீட்டிற்கும் செல்வார் என்பதை அந்தக் குழுவினர் தேர்வு செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரு குழுக்களும் தனித்தனியாக ஆலோசனை செய்கின்றனர். அப்போது, பெண்கள் அணியின் சார்பாக இங்கு வரப்போவது ஜாக்குலினாக இருக்கலாம் என விஷால் கூறுகிறார். இதுகுறித்து ஆண்கள் அணி ஆலோசித்து வருகின்றனர்.
ஜாக்குலின் Vs சுனிதா
ஆனால், பெண்கள் அணியில் ஆலோசனைக்கு பதில் விவாதம் நடக்கிறது. எப்படியும் பெண்கள் அணி சார்பார விளையாட என்னை அனுப்ப மாட்டீங்க. ஏன்னா நான் உங்களுக்கு அங்க போய் பெட்ல அமைதியா படுத்துருக்கனும் என ஜாக்குலின் கேட்கிறார். இதனால் ஆவேசமான சுனிதா, இப்போ நீங்க பெட்ல படுக்குறிங்களா, ஷோபாவில் படுக்குறிங்களா, வெளியில படுக்குறிங்களா என்பது பிரச்சனையே அல்ல. டீம்க்கு என்ன நல்லது என்பது தான். அப்போ நீங்க விளையாட போறது டீம்க்கு நல்லதல்ல என காட்டமாக கூறுகிறார்.
ஆரம்பித்த கலவரம்
இதனால், மனமுடைந்த ஜாக்குலின் பெண்கள் அணி ஆலோசனையிலிருந்து வெளியேறி, தனியாக வந்து அழுகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் கலவரம், குரூப்பிசம் ஆரம்பித்து விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது எனவும் கூறி வருகின்றனர்.
கன்டென்ட் செய்யும் ஜாக்குலின்
முன்னதாக, ஜாக்குலின் ரூம் விஷயத்தில் தற்போதுவரை அடம் பிடித்து வருவதால், ரவீந்தர் கன்டென்ட் செய்ய ஆரம்பித்து விட்டார் என கூறி இருந்தார். இப்படி இருக்கையில், நிகழ்ச்சியில் தொடர்ந்து தனியாக இருந்துவரும் ஜாக்குலின் மீது பெண்கள் மற்றும் ஆண்கள் அணியிலிருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணமாகவே இருக்கிறது.
ஜாக்குலின் பிடிவாதமாக இருக்கிறார், விளையாட்டிற்காக எதையும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார், தான் கூறும் கருத்தை மற்றவர் மீது திணிக்கிறார், அடாவடியாக பேசுகிறார் என பெண்கள் தரப்பும், தனது மனநிலையை மாற்றி மாற்றி வருகிறார் என ஆண்கள் தரப்பும் இவர் மீது புகார்களை முன்வைத்து.
வரப்போகும் பஞ்சாயத்து
இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் டாஸ்க் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகரித்துள்ளது. ஏனென்றால், பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் அறைக்கு பெண்களும், பெண்கள் அறைக்கு ஆண்களும் செல்ல வேண்டும் என்றால் பல நிபந்தனைகளை இரு குழுக்களும் முன் வைத்துள்ளன, அவை இந்த டாஸ்கிற்கு பொருந்துமா, இல்லை புதிய விதிமுறைகள் அமலுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.