அடம்பிடிக்கும் ஜாக்குலின்.. 4 வாரம் நாமினேட் பண்ணக் கூடாதாம்.. என்ன சொல்லப் போகிறார் பிக்பாஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடம்பிடிக்கும் ஜாக்குலின்.. 4 வாரம் நாமினேட் பண்ணக் கூடாதாம்.. என்ன சொல்லப் போகிறார் பிக்பாஸ்..

அடம்பிடிக்கும் ஜாக்குலின்.. 4 வாரம் நாமினேட் பண்ணக் கூடாதாம்.. என்ன சொல்லப் போகிறார் பிக்பாஸ்..

Malavica Natarajan HT Tamil
Oct 07, 2024 02:24 PM IST

பிக்பாஸ் வீட்டில் நான் சௌகரியமாக இருப்பதை விட, என்னுடைய விளையாட்டை நான் நினைத்தபடி விளையாடுவதே முக்கியம் என ஜாக்குலின் விடாப்பிடியாக இருக்கிறார்.

அடம்பிடிக்கும் ஜாக்குலின்.. 4 வாரம் நாமினேட் பண்ணக் கூடாதாம்.. என்ன சொல்லப் போகிறார் பிக்பாஸ்..
அடம்பிடிக்கும் ஜாக்குலின்.. 4 வாரம் நாமினேட் பண்ணக் கூடாதாம்.. என்ன சொல்லப் போகிறார் பிக்பாஸ்..

ரூம் பஞ்சாயத்து

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அவரவர்களுக்கான ரூமை தேர்வு செய்யுமாறு முதலில் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் தனித்தனியே படுத்து உறங்க வசதியாக உள்ள பிங்க் ரூமும், 3 பேர் சேர்ந்து படுக்கும் வகையிலான ரூமும் வைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு ரூம்களில் ஏதேனும் ஒன்றை இரு குழுக்களும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக பிங்க் ரூமை தேர்ந்தெடுத்தனர். பின், இந்த இரு அணிகளாலும் ரூமை தேர்வு செய்ய முடியாத நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சுனிதா மற்றும் ஜெஃப்ரியிடம் முடிவெடுக்கும் அதிகாரம் விடப்பட்டது. ஆனால் அப்போதும் இருவரும் ஒரே அறையைத் தேர்ந்தெடுத்தனர்.

அந்த சமயத்தில், ரூம் விவகாரத்தில் இவர்கள் அனைவராலும் முடிவெடுக்க முடியவில்லை என்றால், அனைத்து போட்டியாளர்களும் வெளியில் படுத்து தூங்க வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார்.

நிபந்தனை விதித்த ஆண்கள்

இதைத்தொடர்ந்து, அவர்களுக்குள்ளாகவே, தனித்தனியாக பிரிந்து விவாதித்தனர். அப்போது, ஆண்கள் அணியினர், பிங்க் ரூமை விட்டுக் கொடுக்கிறோம். ஆனால், பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவாரம் முழுவதும் ஆண் போட்டியாளர்களை நாமினேட் செய்யக் கூடாது. அது எந்த வாரம் என்பதையும் தாங்கள் தான் கூறுவோம் என நிபந்தனை விதித்தனர்.

இதனால், பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சலசலப்பு வர, சிலர் ஒரு வாரம் தானே எனவும், சிலர் இது நியாயமே இல்லை. ஆண்கள் தந்திரமாக விளையாடுகிறார்கள் என பேசி வந்தனர். இறுதியில், பெண்கள் ரூமிற்காக நாமினேட் செய்ய மாட்டோம் என ஒப்புக் கொண்டனர்.

ஒத்துக்கொள்ளாத பெண்கள்

ஆனால், இந்த விஷயம் அத்துடன் நிற்கவில்லை. அதனை ஒவ்வொரு போட்டியாளரிடமும் தெரிவித்து, குழு முடிவுக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். ஆனால், பெண்கள் குழுவின் இந்த முடிவை, பவித்ரா ஜனனி, தர்ஷிகா மற்றும் நிகழ்ச்சிக்குள் கடைசியாக வந்த ஜாக்குலின் ஒப்புக்கொள்ளிவில்லை. பின்னர், பவித்ரா ஜனனி, குழுவின் முடிவுக்கு கட்டுப்பட்டார். இதைத் தொடர்ந்து, தர்ஷிகா விஜய் சேதுபதி கூறியதால் அமைதி அடைந்தார்.

விடாப்பிடியாக இருக்கும் ஜாக்குலின்

ஜாக்குலினோ, தற்போது வரை பெண்கள் குழுவின் முடிவிற்கு கட்டுப்படவில்லை. அவர், ஒருவேளை நாம் பிங்க் ரூமில் சென்று படுத்தால், குழுவின் முடிவுக்கு கட்டுப்பட்டது போன்று மாறிவிடும் என எண்ணி ஹாலிலேயே படுத்து தூங்கினார்.

ஆவேசமான ஜாக்குலின்

இந்நிலையில், நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, ஜாக்குலின் மீண்டும் ரூமில் சௌகரியமாக இருப்பதற்காக என்னுடைய விளையாட்டை பணயம் வைக்க முடியாது. நான் வேண்டுமென்றால் என்னுடைய கட்டிலை ஆண்கள் அணிக்கு விட்டுக் கொடுத்து விடுகிறேன். என்னை 4 வாரம் நாமினேட் செய்யாமல் இருக்கிறீர்களா எனக் கேட்டுள்ளார். பெண்கள் குழு நாமினேஷனுக்கு ஒத்துப் போனதில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன் நேற்று இரவிலிருந்து இதை ரவீந்தர், தீபக் மற்றும் குமரனிடம் கூறி வருகிறார்.

 

இதை கேட்டுக் கொண்டிருக்கும் தீபக், நாமினேஷன் முடிவு அனைவருக்கும் சேர்த்து தான் எடுக்கப்பட்டது என சொல்கிறார். அதேசமயத்தில், உன்னுடைய இந்த முடிவினால் நீ எந்தப் பக்கம் நிற்க வேண்டி இருக்கும் என்பதை யோசித்துக் கொள் என ரவீந்தரும் கேள்வி எழுப்புகிறார்.

பின்னர் பேசிய குமரன், குழுவின் முடிவுக்கு கட்டுப்படவில்லை என உங்களை நாமினேட் செய்தால் பரவாயில்லையா எனக் கேட்கிறார். அதற்கும் ஜாக்குலின் சம்மதம் தெரிவிக்கிறார். இதனால், பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது.

Whats_app_banner