குக் வித் கோமாளி ஓகே.. ஆனா தமிழ் தெரியாமல் பிக் பாஸில் எப்படி? - தாக்கு பிடிப்பாரா சுனிதா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனில் சுனிதா கோகோய் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார். அவர் யார் என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சுனிதா கோகோய் 7 ஆவது போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.
யார் இந்த சுனிதா
சுனிதா கோகோய் செப்டம்பர் 11, 1991 அன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிறந்தார் . காட்டன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு குவஹாத்தியில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார் . சிறு வயதிலிருந்தே, சுனிதாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருந்தது, பின்னர் அது பொழுதுபோக்கு துறையில் அவருக்கு கதவுகளைத் திறந்தது. 2010 ஆம் ஆண்டில் தமிழ் நடன ரியாலிட்டி ஷோ ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 இல் அவர் பங்கேற்றபோது அவரது திருப்புமுனை ஏற்பட்டது.
குக் வித் கோமாளி கொடுத்த புகழ்
சுனிதா கோகோய் 2010 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 இல் அறிமுகமானதன் மூலம் தமிழ் தொலைக்காட்சித் துறையில் முதன் முதலில் முத்திரை பதித்தார். அதில் அவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
சீசன் 8 மற்றும் சீசன் 9 ஆகிய இரண்டிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அடுத்தடுத்த சீசன்களிலும் தொடர்ந்து கலந்து கொண்ட ஒரே போட்டியாளர் இவர் தான். அவரது திரைப்பட வாழ்க்கை 2012 ஆம் ஆண்டு தொடங்கியது, பின்னர் அவர் காஞ்சனா 3 உட்பட பல பிரபலமான படங்களில் தோன்றினார் . கூடுதலாக ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். முதல் சீசன் தொடங்கி சமீபத்தில் முடிந்த சீசன் வரை அவர் கோமாளியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
தமிழில் கொஞ்சம் கொஞ்சம் சுனிதாவிற்கு பேச தெரியும். அவ்வப்போது தமிழில் பாடல்களை தவறாக பாடினாலும் சுனிதா பாடும் விதம் நன்றாக இருக்கும். தமிழ் மொழி சரியாக தெரியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்படி விளையாடுகிறார் என்று பொறுமையாக இருந்து பார்க்கலாம்.
டாபிக்ஸ்