தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "ரேப் பண்ணிடுவேன்.. ஆசிட் ஊத்திடுவேன்.." காது கூசும் வார்த்தைகளால் அர்ச்சனாவை வசைபாடும் நெட்டிசன்ஸ்..

"ரேப் பண்ணிடுவேன்.. ஆசிட் ஊத்திடுவேன்.." காது கூசும் வார்த்தைகளால் அர்ச்சனாவை வசைபாடும் நெட்டிசன்ஸ்..

Dec 04, 2024, 11:08 AM IST

google News
பிக்பாஸில் அருணுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக முத்துக்குமரன் ஆதரவாளர்கள் நடிகை அர்ச்சனாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
பிக்பாஸில் அருணுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக முத்துக்குமரன் ஆதரவாளர்கள் நடிகை அர்ச்சனாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

பிக்பாஸில் அருணுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக முத்துக்குமரன் ஆதரவாளர்கள் நடிகை அர்ச்சனாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் மிகவும் பரிட்சையமான நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகளும், அவர்களின் செயல்களும் பலரால் பார்க்கப்படுவதுடன் அது விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறது.

பிக்பாஸ் அர்ச்சனா

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 8 தொடங்கிய சமயத்தில் இருந்து சில பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர், தன் அதிரடியான பேச்சுகளாலும் சண்டையாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து டைட்டில் வின்னரானார்.

அருண் பிரசாத்துடன் கிசுகிசு

இவர், தற்போதைய சீசனில் போட்டியாளராக இடம்பெற்ற அருண் பிரசாத்தை காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகின. அதற்கு தகுந்தாற்போல், அருணும் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி அடிக்கடி ஹிண்ட் கொடுத்துள்ளார். மேலும், அர்ச்சனாவின் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்து வாழ்த்துகளுடன் தன் காதலையும் முத்தத்தையும் வெளிப்படுத்தினார். இதை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்த அர்ச்சனா, இந்த வாழ்த்து செய்தி அவரது பிறந்த நாளை முழுமையாக்கியதாக தெரிவித்தார்.

விளக்கமளித்த அர்ச்சனா

இதனால், இவர்கள் காதலித்து வருவது உறுதி செய்யப்பட்டதாக பலரும் கூறிவந்தனர். இப்படி இருக்கையில், அர்ச்சனா, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். அவர் என் நல்ல நண்பன் எனக் கூறி வதந்திகளை முடித்து வைத்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமைதியாக இருந்த அருண், நாட்கள் செல்ல செல்ல பயங்கரமாக மற்றவர்களை கிண்டல் செய்வதும், அவர்களின் செயல்களை விமர்சிப்பதுவுமாக இருந்தார்.

கோபப்பட்ட முத்துக்குமரன் ஆதரவாளர்கள்

இவர், அதிகளவில் பிக்பாஸ் வீட்டில் முத்துக்குமரனை விமர்சித்து வந்தார். இது முத்துக்குமரனின் ஆதரவாளர்களை கோபப்படுத்திய நிலையில், அவர்கள் அனைவரும் அருணின் தோழியான அர்ச்சனாவை மிகவும் மோசமாக திட்டி வருகின்றனர்.

பாலியல் ரீதியில் மிக மோசமாகவும், ஆசிட் அடித்து விடுவதாகவும் கூறியதுடன் மட்டுமல்லாமல், அவரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றனர்.

இதை அர்ச்சனா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது போன்ற கருத்துகளை கூறுவோருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

அர்ச்சனா ட்வீட்

அந்கப் பதிவில், "வாழ்க்கை என்பது கிரிக்கெட்டைப் போன்றது, நீங்கள் கடந்த ஆட்டத்தில் விளையாடியிருந்தாலும் உங்களுக்குப் பிடித்த அணியை தற்போதும் உற்சாகப்படுத்தலாம். இதற்காக, எனக்கு பலாத்காரம் மற்றும் ஆசிட் வீச்சு மிரட்டல்கள் வந்துள்ளன. அதற்கு இந்த ஸ்கிரீன்ஷாட் ஒரு உதாரணம் மட்டுமே. எனது சோசியல் மீடியா அக்கவுண்ட்களுக்கு பல கேவலமான, அருவருப்பான குறுஞ்செய்திகள் வருகின்றன. இவற்றால் என்னை வருத்தப்படவோ, ஒரு இடத்தில் அமர வைக்கவோ முடியாது. ஆதாரமற்ற மற்றும் போலியான தகவல்களை பரப்பும் அனைவரின் மீதும் அந்தந்த அக்கவுண்ட்களின் நிர்வாகிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம் புகார்

இந்த ட்வீட்டுடன் சில அக்கவுண்ட்டின் பெயர்களை குறிப்பிட்ட அர்சசனா, ஸ்கீர் ஷாட்டுகளுடன் தமிழ்நாடு போலீசையும் சைபர் கிரைமையும் குறிப்பிட்டுள்ளார். இது பிக்பாஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி