நடிக்காதடா! எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல! முத்துக்குமரனை விளாசிய அன்ஷிதா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிக்காதடா! எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல! முத்துக்குமரனை விளாசிய அன்ஷிதா!

நடிக்காதடா! எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல! முத்துக்குமரனை விளாசிய அன்ஷிதா!

Suguna Devi P HT Tamil
Oct 14, 2024 02:01 PM IST

பிக்பாஸ் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் அன்ஷிதாவிற்கும் முத்துக்குமரனுக்கும் சண்டை நடக்கிறது. முத்துக்குமரன் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு சென்று விளையாடி வருகிறார்.

நடிக்காதடா! எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல! முத்துக்குமரனை விளாசிய அன்ஷிதா!
நடிக்காதடா! எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல! முத்துக்குமரனை விளாசிய அன்ஷிதா!

பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கலவரத்திற்கும், கண்டெண்ட்டிற்கும பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மற்ற எந்த சீசனிலும் இல்லாத வகையில் பல விதமான புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி எனப் பிரிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் நேற்றோடு முடிந்த நிலையில், இரண்டாவது வார தொடங்கியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது வார நாமினேஷன் இன்று நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற விரும்பும் போட்டியாளர்களை நாமினேட் செய்து உள்ளனர். முதல் வாரத்தில் பேட்மேன்  ரவீந்தர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்ஷிதா-முத்துக்குமரன் சண்டை 

பிக்பாஸில் இன்று இரண்டாவது வாரத்திற்கான நாமினேட் நடந்து முடிந்தது. இதில் ஜெப்ரி, ரஞ்சித் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் அன்ஷிதாவிற்கும் முத்துக்குமரனுக்கும் சண்டை ஏற்படுகிறது. முத்துக்குமரன் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு சென்று விளையாடி வருகிறார். புரோமோ வீடியோவில் முதலில் பேசிய அன்ஷிதா, முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு இனிமேல் வந்த நல்லவன் மாதிரி சீன் போடாதே என்று சொல்கிறார். 

இதனைக் கேட்ட முத்துக்குமரன், "நான் நல்லவன். உங்களுக்கு எதிரா விளையாடுவதால் உங்களுக்கு தப்பா தான் தெரியும் என்று கூறுகிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அன்ஷிதா நடிக்காதடா! எனக் கோபமாக கத்துகிறார். மேலும் முத்துக்குமரன் பொறுமையாக எது என்னிடம் பிடிக்க வில்லை என பொறுமையாக கேட்க. எந்த பதிலும் கூறாமல் உன்ன எனக்கு பிடிக்கல. எனக்கு இஷ்டம் இல்ல என்று ஒரே மூச்சாக கத்துகிறார். 

அன்ஷிதா-அர்ணவ் 

பிக்பாஸ் ஆரம்பத்தில் இருந்தே அன்ஷிதா மற்றும் அர்ணவ் ஆகியோரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மனைவியை குழந்தையோடு தவிக்க விட்டு, அன்ஷிதாவுடன் சேர்ந்து இருப்பதாக அவரவர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருவரும் வந்து இருந்தது சக போட்டியாளர்களுக்கும் பிடிக்க வில்லை எனத் தெரிகிறது. தேவை இல்லாமல் பெரிய சர்ச்சை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே அன்ஷிதா இப்படி முத்துக்குமரனிடம் கத்தியிருக்க கூடும் எனவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பரவி வருகிறது. மேலும் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இருவரது பெயரும் இல்லை என்பதாலும் சற்று தைரியத்தில் அன்ஷிதா நடப்பதாகவும் கருதுக்கள் எழுந்துள்ளது. 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.