தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உப்பு சப்பு இல்லாமல் செல்லும் பிக்பாஸ்.. அதிரடி முடிவு எடுக்க போகும் பிக்பாஸ்.. அடுத்த என்டரி இவங்களா?

உப்பு சப்பு இல்லாமல் செல்லும் பிக்பாஸ்.. அதிரடி முடிவு எடுக்க போகும் பிக்பாஸ்.. அடுத்த என்டரி இவங்களா?

Divya Sekar HT Tamil

Nov 19, 2024, 12:04 PM IST

google News
மந்தமாக செல்லும் இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் வைல்டு கார்டு என்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ்
மந்தமாக செல்லும் இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் வைல்டு கார்டு என்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ்

மந்தமாக செல்லும் இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் வைல்டு கார்டு என்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ்

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அடுத்தவாரமே மீண்டும் எண்டரி கொடுத்தார்.

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக்பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.

சுவாரசியமே இல்லாத பிக்பாஸ்

சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அந்த வகையில், 6வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, ராணவ், ரஞ்சித், ரியா, சாச்சனா, சத்யா, சிவக்குமார், சொந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தப் பட்டியலில் உள்ள ஒருவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றாமல் இருக்க போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் அணி, கலந்து ஆலோசித்து ஒருவரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றி வீட்டிலேயே இருக்க வைப்பர். அந்தவகையில், 6வது வாரத்தில் நாமினேஷன் பாஸ் வென்ற ஆண்கள் அணி தீபக்கை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றினர்.

5 போட்டியாளர்கள் எலிமினேட்

இதையடுத்து நாமினேஷன் பட்டியலில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்படுவர். குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர். அந்த வகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து  வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த ரியா தியாகராஜன் வெறியேறினார். இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பின்னரும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. பிக்பாஸே நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களிடம் ஓப்பனாக சொல்லிவிட்டார், யாருமே இன்னும் இந்த வீட்டில் வாழ தொடங்கவில்லை என்று. இதுவரை எந்த சீசனிலும் பிக் பாஸ் இதுபோன்று ஓப்பனாக போட்டியாளர்களுக்கு ஹிண்ட் கொடுத்ததில்லை.

பிக்பாஸ் அதிரடி

மந்தமாக செல்லும் இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் வைல்டு கார்டு எண்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ். அந்த வகையில் இந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆனவர்களில் ஒருவரை மீண்டும் உள்ளே அனுப்பி ஆட்டத்தை பரபரப்பாக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம். அப்படி ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா இதில் யார் அது யார் என்பது வரும் நாளில் தெரிந்துவிடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை