தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது.. மாட்டிய முக்கியப் புள்ளி.. புட்டுபுட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது.. மாட்டிய முக்கியப் புள்ளி.. புட்டுபுட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

Marimuthu M HT Tamil

Nov 05, 2024, 05:24 PM IST

google News
அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது.. மாட்டிய முக்கியப் புள்ளி.. புட்டுபுட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன் உடைய பேட்டியைக் காணலாம்.
அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது.. மாட்டிய முக்கியப் புள்ளி.. புட்டுபுட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன் உடைய பேட்டியைக் காணலாம்.

அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது.. மாட்டிய முக்கியப் புள்ளி.. புட்டுபுட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன் உடைய பேட்டியைக் காணலாம்.

அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது என்றும்; மாட்டிய முக்கியப் புள்ளி குறித்தும் புட்டுபுட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ‘’நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர். இவர் பாலாஜி டெலி ஃபிலிம்ஸின் கிரியேட்டிவ் ஹெட். இந்த நிறுவனத்தின் சார்பில் நிறைய சீரியல்கள் தமிழில் எடுக்கப்பட்டன. இப்போது ஆல்ட் என்னும் ஒரு ஓடிடி தளத்தை ஆரம்பித்தார். ஏக்தா கபூர், காந்தி பாட்டி என்னும் நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மைனர் பெண்களின் ஆபாச வீடியோவை வெளியிட்டதாகவும், அதைப் பல பேர் பார்த்ததாகவும் இதன்மூலம் நிறைய வருமானம் வந்ததாகவும் தெரிகிறது.

இதன்மூலம் ஏக்தா கபூர் காவல் நிலையப் புகாருக்கு உள்ளானார். இந்நிலையில் புத்திசாலித்தனமாக அந்த வீடியோக்களை தனது தளத்தில் இருந்து நீக்கினார், ஏக்தா கபூர். தற்போது ஏக்தா கபூர் மீது போக்சோ சட்டத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காமசூத்ரா கோயிலில் வழிபட்ட தமன்னா:

அமலாக்கத்துறையினர் தமன்னாவிடம் தொடர்ந்து ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து காமாக்யா கோயிலில் சென்று தமன்னா வழிபாடு நடத்தினார். காமாக்யா கோயில் என்பது காமசூத்திராவை அடிப்படையாகக் கொண்ட கோயில் என்பது கணிப்பு. ஏன் அங்கு சென்று அவர் வழிபட்டார் என்பது மர்மமாகவே இருக்கிறது.

தமிழில் முதல் காதல் காட்சி இடம்பெற்ற திரைப்படம், அம்பிகாவதி. இப்படத்தில் கதையின் நாயகன், கதாநாயகியின் கன்னத்தோடு கன்னம் உரசும் காட்சி இடம்பெற்றதை அறிந்து திரையரங்கில் வசூல் அதிகரித்தது. இக்காட்சியில் எம்.கே.தியாகராஜ பகவதரும், சந்தான லெட்சுமியும் நெருங்கி அணைத்தபடி, கன்னத்தோடு கன்னம் உரசும் காட்சிகள் இடம்பெற்றன. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, அந்தக் கால ரசிகர்கள், திரையரங்கத்திற்குச் சென்றனர்.

பாலியல் கொடுமைகள் நிறைந்த படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது. படத்தின் பெயர், உக்ரா அவதாரம். இந்தப் படம், பாலியல் வன்முறைக் குற்றங்கள், தற்கொலைகளைப் பற்றியது, இதன் காரணமாகவே, இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்தவர், பிரியங்கா திரிவேதி. இவர் அஜித் குமாருடன் ‘ராஜா’ படத்தில் ஜோடியாக நடித்தவர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அவரிடம்பேசும்போது, நான் இந்த திரைப்படத்தில் போலீஸாக அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

அந்த மாதிரி படங்கள் தான் என் பசியைப் போக்கியது - ஷகிலா

நடிகை ஷகிலா ஒரு யூட்யூபில் பேட்டி கொடுக்கும்போது, தான் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள் என்றும், தான் ஒரு போதும் புர்காவை ஆதரித்தது கிடையாது என்றும்; தான் ஒருநாளும் புர்கா அணிந்தது கிடையாது என்றும் கூறினார். தான் செய்வது எல்லாம் ஹராம் தான் என்றும்; செக்ஸ் படங்களில் நடித்து தான், தன் பசியைப் போக்கிக்கொண்டதாகவும் நடிகை ஷகிலா பேட்டியளித்திருக்கிறார்.

தனக்கு வேலை கொடுத்தது செக்ஸ் சினிமா தான் என்றும், அதைச் சொல்வதற்கு தான் வெட்கப்படவே இல்லை என்றும் நடிகை ஷகிலா பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் பாலியல் கல்வி படம் எடுக்கப்போகிறோம் என்று சொல்லி தான் அழைத்துச் சென்றார்கள், அதன்பின் தான் தன்னை இப்படிக் காட்டினார்கள் என நடிகை ஷகிலா கூறியிருக்கிறார்.

மலையாளத்தில் பிரபல நடிகை மல்லிகா சுகுமாரன். இவர் பிருத்வி ராஜனின் தாய். மலையாளத்தில் நடக்கும் பாலியல் தொல்லைப் பிரச்னை அனைத்தும் மோகன் லாலுக்குத் தெரியும் என்றும், நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை முறைப்படி போய்ச்சேரவில்லை. இதுதொடர்பான அனைத்து விஷயங்களையும் மோகன் லால் தெரிந்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்’’என பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி