Tamannaah: ஜான் ஆபிரஹாம் - தமன்னா இணைந்து இதயத்தை வருடும் "நீதானே நீதானே" - அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல்
ஜான் ஆபிரஹாம் - தமன்னா இணைந்து வேதா படத்தில் இதயத்தை வருடும் விதமாக நீதானே நீதானே என்ற ரெமான்டிக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமான இதில் ரொமாண்டிக் பக்கத்தை காட்டும் விதமாக இந்த பாடல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல் இருக்கும் என தமன்னா கூறியுள்ளார்.
ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா இணைந்து நடனமாடிய இதயத்தை தொடும் விதமாக 'நீதானே நீதானே...' என்ற பாடல் 'வேதா' படத்திலிருந்து வெளியாகியுள்ளது.
ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் படம் 'வேதா'. இதில் இடம்பிடித்திருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ தற்போது வெளியாகியுள்ளது.
ஜான் ஆபிரஹாம் - தமன்னா ரெமான்டிக் நடனம்
இந்த படத்திலிருந்து ஏற்கனவே வெளியான 'ஹோலியான்' மற்றும் 'மம்மி ஜி' ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா இருவரும் இணைந்து ரொமான்டிக்காக நடனமாடியுள்ளனர்.
இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது.
பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் இந்த பாடல் குறித்து கூறியதாவது:
'நீதானே நீதானே..." பாடல் 'வேதா' படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்" என்றார்.
அனைவருக்கும் கனெக்ட் ஆகும் பாடல்
"ஜான் ஆபிரஹாமுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்துக்கு கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்" என்று பாடல் குறித்து தமன்னா கூறினார்.
இந்த பாடலுக்கு அமல் மாலிக் இசையமைத்துள்ளார். குணால் வர்மா பாடல் வரிகளுக்கு அர்ஜித் சிங் பாடியுள்ளார். பாடல் குறித்து அவர் கூறியதாவது, "இந்த காதல் மெல்லிசை 'நீதானே நீதானே...' நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை ஊடுருவும். இது பாடல் என்பதையும் தாண்டி, நான் அனுபவித்த காதலை இந்தப் பாடலில் முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.
நிகில் அத்வானி இயக்கி இருக்க, அசீம் அரோரா எழுதிய ‘வேதா’ என்கிற இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து உமேஷ் கேஆர் பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, ஜான் ஆபிரகாம் மற்றும் மீனாட்சி தாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பான ‘வேதா’ ஆகஸ்ட் 15, அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமன்னா புதிய படங்கள்
தமன்னா நடிப்பில் இந்த ஆண்டில் அரண்மணை 4 வெளியானது. படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், பேயாகவும் தோன்றிய தமன்னாவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்த ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து நடித்திருக்கும் வேதா சுதந்திர தின ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் ராவ், ஷரத்தா கபூர் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் இந்தி படமான ஸ்ட்ரீ 2, தெலுங்கு திகில் படமான ஓடெல்லா 2 ஆகிய படங்களில் தமன்னா நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்விரு படங்களும் வெளியாகும் என தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்