என் பசியை கண்டுகொள்ளாத மதம் மீது நம்பிக்கை இல்லை.. இங்கு எல்லாமே ஹராம் தான்.. ஆவேசமான ஷகிலா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என் பசியை கண்டுகொள்ளாத மதம் மீது நம்பிக்கை இல்லை.. இங்கு எல்லாமே ஹராம் தான்.. ஆவேசமான ஷகிலா

என் பசியை கண்டுகொள்ளாத மதம் மீது நம்பிக்கை இல்லை.. இங்கு எல்லாமே ஹராம் தான்.. ஆவேசமான ஷகிலா

Malavica Natarajan HT Tamil
Oct 19, 2024 04:00 PM IST

சிறுவயதில் என் குடும்பம் பசியால் தவித்தபோது, கண்டுக்கொள்ளாத மதம், என் பசியைப் போக்க செய்யும் வேலையை குறை சொல்ல வருமா என நடிகை ஷகிலா ஆவேசமாக பேசியுள்ளார்.

என் பசியை கண்டுகொள்ளாத மதம் மீது நம்பிக்கை இல்லை.. இங்கு எல்லாமே ஹராம் தான்.. ஆவேசமான ஷகிலா
என் பசியை கண்டுகொள்ளாத மதம் மீது நம்பிக்கை இல்லை.. இங்கு எல்லாமே ஹராம் தான்.. ஆவேசமான ஷகிலா

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், ஆதன் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தன் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை மிகவும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

சிதைந்த போலீஸ் ஆசை

சிறு வயதில் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். அதற்கு தகுந்தாற் போல என் உடல்வாகும் இருந்தது. ஆனால் என் தந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டு குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் தள்ளினார். அதை சமாளிக்க அம்மா வைத்த உணவு கடையையும் அவர் சீரழித்தார். இந்நிலையில், குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் என்னைத் தேடி வந்த சினிமா வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் என ஷகிலா கூறியிருந்தார்.

மதம் எனக்கு உதவவில்லை

பாலியல் கல்வி குறித்த படம் என என்னை அழைத்துச் சென்றவர்கள் தன்னை வேறுமாதிரியான படத்தில் நடிக்க வைத்தனர். பின். வாழ்க்கையில் பசி துரத்த நான் எனக்கு வந்த அடுத்தடுத்த படங்களில் நடித்தேன். என் பசியை போக்கவோ, என் குடும்பத்தின் பசியை போக்கவோ என் மதம் உதவவில்லை. அதனால், நான் என் உடலை பயன்படுத்தி நடித்து சம்பாதித்து என் குடும்பத்திற்கு கொடுத்தேன் என்றார்.

இஸ்லாம் மதத்தில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவை கூடத்தான் ஹராம். அதை இங்கு பலரும் செய்துகொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி இருக்க என்னை யார் வந்து கேட்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

வெறுக்கும் பெண்கள்

மலையாள திரையுலகில் பல கதாப்பாத்திரங்களில் நான் நடித்துள்ளேன். இருந்தும் என் கவர்ச்சி மட்டும் தான் கடைசியில் வெளியே தெரிந்தது. இதனால் பெண்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. சில வருடங்களுக்கு முன்நான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், என்னை புர்கா அணிந்து நிகழ்ச்சிக்கு வருமாறு வலியுறுத்தினர். அதற்கு நான் சம்மதம் தெரிவித்த போது, பலரும் என்னை நோக்கி கேள்வி எழுப்பினர்.

சினிமாவில் கவர்ச்சியை காட்டிவிட்டு, இங்கு மட்டும் புர்கா அணிவீர்களா என என்னை நோக்கி எழுந்த கேள்வியால், நான் தற்போது வரை புர்கா அணிவதே இல்லை.

எனக்கு பெருமை தான்

நான் கவர்ச்சி நடிகையாக இருந்ததற்காக எந்த விதத்திலும் நான் தயக்கமோ வருத்தம படவில்லை. என்னால், என் குடும்பம், தயாரிப்பாளர், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவரின் குடும்பமும் பசியின்றி வயிறார சாப்பிட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் தலை நிமிர்ந்து தான் இருப்பேன் எனக் கூறியிருந்தார்.

அத்துடன் தொடர்ந்து பேசிய அவர், மலையாள திரைப்படத்தில், என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் என்னால் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் இனி மலையாளப் படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்றேன்.

மகிழ்ச்சியை தந்த ஜெயம் படம்

இதையடுத்து, யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. அப்போது, வீட்டில் 4 வருடமாக வேலையில்லாமல் இருந்த எனக்கு வாய்ப்பளித்தது ஜெயம் ராஜா தான். அவர் தனது ஜெயம் படத்தில் நடிக்க வழங்கிய வாய்ப்பை நான் என்றும் மறக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.