சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர்
Nov 30, 2024, 09:29 PM IST
சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை என பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் பேட்டியளித்துள்ளார்.
சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள் குறித்தும், அவர் செய்வினையில் சிக்கித்தவிப்பது பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சூர்யாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த எந்தப் படமும் சரியாகபோகவில்லை. எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார், சூர்யா. இந்த படம் அட்டர் ஃபிளாப். இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்,
மிகவும் சிரமப்பட்டு, வொர்க் அவுட் செய்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படம், கங்குவா. இந்தப் படம் சிறுத்தை சிவாவின் கதை, திரைக்கதை மோசமாக இருந்ததால், இப்படம் வெற்றிபெறவில்லை.
கங்குவா படத்தைத் தயாரிக்க ரூ.300 கோடி வரை ஆனது என படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தெரிவித்தார். போட்ட முதலீடு அளவுக்கு கங்குவா வசூலைப் பெறுமா என்றால் சந்தேகம்.
கங்குவா படத்துக்குப் போட்ட முதலீடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், கங்குவா படத்தை விமர்சித்தவர்கள் எல்லோருமே, ‘கங்குவா நன்றாக இல்லை.. நன்றாக இல்லை’ எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், விமர்சனமும் படம் நன்றாக இல்லாததும் காரணமாக கங்குவா படம் வசூலைப் பெறவில்லை என்பது தான் உண்மை.
சூர்யாவை எதிர்க்கும் இரண்டு பெரிய நடிகர்கள்:
அந்தளவுக்கு நடிகர் சூர்யாவுக்கு கெட்டநேரம் தொடங்கிவிட்டதா என்பதும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், சூர்யாவுக்கு செய்வினை வைத்துவிட்டார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
சூர்யாவை எதிர்த்து இரண்டு பெரிய நடிகர்களும் சில அரசியல் கட்சிகளும் சதி செய்கின்றனர் என தயாரிப்பாளரும் கங்குவா படத்தின் புரோமோட்டருமான தனஞ்ஜெயன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதன் அடிப்படையில் நடிகர் சூர்யாவும் அவரது காதல் மனைவி ஜோதிகாவும் இணைந்து, சண்டியாகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். (இந்த யாகம் எதிரிகளை அழிக்கவும், மாந்திரீகம், செய்வினை போன்ற எதிர்மறை விஷயங்களில் இருந்துவிடுபடவும் உதவும் என இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும், துர்கா தேவியின் அருள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது)
அதற்கு முன்னதாக நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் ராணிப்பேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று, வழிபட்டனர். இந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு ரோப் கார் மூலம் சென்ற சூர்யா, நரசிம்மரை பிரார்த்தனை செய்தார். அப்போது அவரது முகம் மிகவும் களையிழந்து காணப்பட்டது. தாடி வைத்திருந்தார். வழக்கமாக சூர்யா முகத்தில் இருந்த புன்னகை இல்லவே இல்லை.
தாய் மூகாம்பிகா கோயிலுக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஒரு தொடர்பு:
அதற்குப் பிறகு நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து கர்நாடகாவில் உள்ள தாய் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்கள். மூகாம்பிகை அம்மன் கோயில் எதற்கு பிரசித்திபெற்றது என்று சொன்னால், நீங்கள் முன்பிருந்த வாழ்க்கையில் இருந்து பின்தங்கிவிட்டீர்கள் என்று சொன்னால், நீங்கள் முன்பிருந்த வாழ்க்கையில் இருந்து செல்வத்தில் பின் தங்கிவிட்டீர்கள் என்று சொன்னால், கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றால் இழந்ததை மீட்டுக் கொடுக்கும் தெய்வம்.
புகழின் உச்சியில் இருந்தார், சூர்யா. முன்பெல்லாம் அவர் படங்கள் ஓடியது. இப்போது ஓடவில்லை. இழந்த புகழைப் பெற படங்கள் ஓட ஜோதிகாவும் சூர்யாவும் தம்பதி சமேதராக சென்று வழிபட்டார்கள்.
முன்னதாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மூகாம்பிகா கோயிலுக்குச் சென்று தங்க வாள் கொடுத்து வணங்கினார். இப்போதும் அங்கு செல்பவர்கள் எம்.ஜி.ஆர் கொடுத்த வாளைப் பார்த்து மகிழச்செய்வார்கள்.
நாடோடி மன்னன் மிகப்பெரிய வசூலை எட்டியபோது, அப்போதைய விநியோகிஸ்தர் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை பரிசளித்தார். அந்த தங்க வாளை எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்கு நன்கொடை வழங்கினார். அடுத்து ஜோதிகா, தனியே திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஏன் சூர்யாவை அழைத்துச் செல்லவில்லை என்றால், சூர்யாவை அழைக்க அவரது வீட்டுக்குப் போகவேண்டியிருக்கும். அங்கு அவரது மகன் சிவகுமார்,கொழுந்தனார் கார்த்தி இருப்பார், சூர்யாவின் அம்மா இருப்பார். அதனால் மாமியார் முகத்தில் முழிக்கக் கூடாது என்ற காரணத்தால், ஜோதிகா சென்னை வராமல் நேரடியாக திருப்பதி போய்விட்டார். அதன்காரணமாக தனியாகப் போய் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
ஜோதிகா பிறப்பில் இஸ்லாமியர். திருப்பதியில் இந்துக்கள் அல்லாதோர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒருவேளை ஜோதிகா இந்து மதத்திற்கு மாறிவிட்டாரா எனத்தெரியவில்லை. சூர்யாவை இந்து முறைப்படி திருமணம் செய்தார், ஜோதிகா. அந்தமுறைப்படி தானும் இந்து தான் எனச் சொல்லி அனுமதிபெற்றிருக்கலாம்.
எது எப்படியோ தோல்விகள் சூர்யா, ஜோதிகாவை விட்டு விலகினால் சரி''என மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.
நன்றி: கிங் 24x7 யூட்யூப் சேனல்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்