திருப்பதியில் சிங்கிளாக ஏழுமலையானை தரிசித்த ஜோதிகா! ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசு - சூர்யா எங்கே போனார்?
சூர்யா இல்லாமல் திருப்பதிக்கு சிங்களாக வந்து ஏழுமலையானை சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஜோதிகா. அதிகாலையிலேயே அவர் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசையும் பெற்றுக்கொண்டார்.

கங்குவா படத்துக்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை விமர்சித்து கோபமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை ஜோதிகா. அதில், எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுபவர்கள் சினிமாவிற்காக வேறு எதனையும் செய்யவில்லை. நான் சூர்யாவின் மனைவியாக, இல்லாமல், ஜோதிகாவாகவும், சினிமாவை காதலிப்பவளாகவும் இதை எழுதுகிறேன்" குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. தற்போது பேமிலி ஆடியன்ஸ் வருகையால் படத்தின் வசூல் ரூ. 100 கோடியை கடந்துள்ளது. இருப்பினும் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது.
கங்குவா தோல்வியால் ஏற்பட்ட மனவருதத்தில் இருந்து மீளும் விதமாக சூர்யா, ஜோதிகா ஆகியோர் கோயில் கோயிலாக சுற்று வருவதாக தெரிகிறது. முதலில் சென்னையை அடுத்த சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு கங்குவா இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் நடிகர் சூர்யா.