‘சூர்யா நடிகரா.. எதிர்பார்க்கவே இல்ல.. அந்த பெயிண்ட் பார்த்துட்டு..’ இயக்குனர் விஷ்ணுவர்த்தன் உருக்கம்!
சூர்யா பயங்கர அமைதியானவர். பள்ளி லீடர் மாதிரி தான் அவர். அப்படியே வந்து திடீர்னு சோதனை போடுவார். அப்போ கூட பேச மாட்டார். ‘ஷூ.. கொஞ்சம் சரியில்ல.. அதை மாத்திடு’ என்று தான் சொல்லுவார்.
பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தன், டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘யுவன்சங்கர் ராஜா உடனான என்னுடைய பழக்கம், பள்ளி காலத்தில் இருந்து தொடர்கிறது. யுவன் என்னை விட ஜூனியர், என் தம்பி கிருஷ்ணா உடன் ரொம்ப க்ளோஸ் யுவன். இருந்தாலும், ஒரே பேட்ஜ் நாங்க. ஸ்கூல் பேட்ஜ் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். சுமந்த், வைபவ், ப்ரேம் ஜி, யுவன்சங்கர் ராஜா எல்லாம் ஒரு கேங்க். கார்த்தி, சூர்யா என்னை விட சீனியர். ஸ்கூல் கும்பல் வேற கேங். சூர்யா நடிகராக வருவார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
சூர்யா நடிகரா? நம்ப முடியவில்லை
சூர்யா பயங்கர அமைதியானவர். பள்ளி லீடர் மாதிரி தான் அவர். அப்படியே வந்து திடீர்னு சோதனை போடுவார். அப்போ கூட பேச மாட்டார். ‘ஷூ.. கொஞ்சம் சரியில்ல.. அதை மாத்திடு’ என்று தான் சொல்லுவார். அவ்வளவு தான் அவர் பேசுவார். அப்படிப்பட்டவர், நடிகர் ஆவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யுவன் அப்பவே மியூசிக் போட்டுட்டு இருப்பான். ‘ஏய்.. நான் ஒரு மியூசிக் வாசிச்சிருக்கேன்.. வந்து கேளுங்க..’ என்று அழைப்பார். நாங்க சைக்கிளோடு டி-நகர் யுவன் வீட்டுக்கு பறந்து போயிடுவோம். அப்போ தான், ராஜா சார பார்க்கலாம்ல!
யுவன் ரூம்க்கு போனால், அவன் ட்யூன் போட்டு காட்டுவான். அப்போ காமெடிக்கு சொன்னேன், ‘மச்சி.. நான் இயக்குனர் ஆனால், நீ தான் மியூசிக் டைரக்டர்னு’. அப்போ நான் இயக்குனர் ஆவேன் என்று சுத்தமா ஐடியாவே இல்ல. ஆனால், அதுவும் நடந்தது. யுவன் இசையமைப்பாளராக ஒரு படத்தில் அறிமுகம் ஆகிறார் என்றதும், எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. அது நடக்கும் என்று தெரியும். ரொம்ப சின்ன பையனா மியூசிக் போட வந்தார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. நான் அப்போ உதவியாளரா கூட அறிமுகம் ஆகவில்லை.
யுவன் இல்லை என்றால் கெரியர் இல்ல
நான் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்போ, ‘நீ தான் யுவன் கூட பழக்கமா இருக்கேல.. அவரை வெச்சு படம் பண்ணு’ என்று எல்லாரும் சொன்னாங்க. எனக்கு ஒரே மகிழ்ச்சி.யுவன் பயங்கர பீக்கில் இருக்கிறார். தி.நகர் வீட்டில் இயக்குனர் ஒருவர் சந்திக்க வருகிறார் என்று அவரிடம் கூறிவிட்டார்கள். நான் வருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளருடன் நான் போனேன். ‘ஏ.. ப்ரோ.. நீங்க தான் டைரக்ட் பண்றீங்களா..’ என கட்டிப்பிடித்து பேசினார். நாங்கள் அப்பாய்ன்மெண்ட் கேட்கத் தான் போனோம். அவர் வேலையை ஒப்புக் கொண்டார்.
அன்று யுவன் ஓகே சொன்னதால் தான், என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது. இப்போது நான் செய்யும் நேசிப்பாயா படம் வரை, யுவன் சங்கர்ராஜாவின் பங்கு முக்கியம். முதல் படம் பெரிதாக போகவில்லை. ஆனால், படம் பண்ணிட்டோம் என்கிற பயங்கர மகிழ்ச்சி எனக்கு. பெயிண்டிங் விளம்பரத்தில் என்னுடைய பேரை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி. படம் பெரிதாக போகவில்லை என்று பேசப்பட்ட பிறகு கொஞ்சம் வருத்தமாகிவிட்டது. நல்ல படம் பண்ணவில்லை என்று தோன்றியது. அடுத்த படம் பிச்சு எடுக்குறோம் என்று தான் தோன்றியது.
அறிந்து அறியாமல் பண்ணும் போது, பயமே தெரியவில்லை. அப்படி தான் இருந்தது அந்த வயதில். முதல் படம் தோல்வியான போது, வீழ்ந்துவிடத் தோன்றவில்லை. அடுத்து எழுந்து ஓட வேண்டும் என்று தான் தோன்றியது,’’ என்று அந்த பேட்டியில் விஷ்ணு கூறியிருந்தார்.