தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஏ.ஆர்.ரஹ்மான் தனிமையில் இருக்கிறார்.. எத்தன நாளுக்கு சாய்ரா மேம் இப்படியே இருப்பாங்க? கேள்வி எழுப்பும் இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான் தனிமையில் இருக்கிறார்.. எத்தன நாளுக்கு சாய்ரா மேம் இப்படியே இருப்பாங்க? கேள்வி எழுப்பும் இசையமைப்பாளர்

Nov 22, 2024, 03:28 PM IST

google News
மனைவியின் விவாகரத்து அறிவிப்பிற்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தனிமையில் இருப்பதாக அவருடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர் தெரிவித்துள்ளார்.
மனைவியின் விவாகரத்து அறிவிப்பிற்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தனிமையில் இருப்பதாக அவருடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர் தெரிவித்துள்ளார்.

மனைவியின் விவாகரத்து அறிவிப்பிற்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தனிமையில் இருப்பதாக அவருடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தன் கணவரை விட்டுப் பிரிவதாக அவரது வழக்கறிஞர் மூலம் அறிவித்தார். இதையறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்குமாறு அவரது மகன் அமீனும் கருத்து தெரிவித்திருந்தார்.

வதந்திகள்

இது பூதாகரமாக வெடித்த நிலையில், பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பிரிவிற்கு பல காரணங்களை பரப்பி வந்தனர். அத்துடன், ஏ.ஆர்.ரஹ்மானை வேறு பெண்ணுடன் தொடர்புபடுத்தியும் பேசி வந்தனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர், இந்த விவகாரம் குறித்து நக்கீரன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒழுக்கம், நேர்மைக்கு அடையாளம் ஏ.ஆர்.ரஹ்மான்

அதில்," ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் ஒழுக்கமானவர். அவர் நேர்மையின் எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவரின் பண்புகளைப் பற்றி வெளியில் கூறினால் கூட இந்த காலத்தில் இப்படி ஒருவரால் இருக்க முடியுமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அத்தனையும் உண்மை. அவருடன் பணியாற்றும் நாங்கள் பல விஷயங்களில் அவரால் ஈர்க்கப்பட்டு, அவரைப் போல பண்பாக நடந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம்.

பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்

ஏ.ஆர்.ரஹ்மான் உடைகளில் மிகவும் நேர்த்தியாக இருப்பார். ஸ்டூடியோவிற்கு வருவோரின் உடைகள் குறிப்பாக பெண்களின் உடைகள் சரியில்லை என்றால் அவர்களின் முகத்தைப் பார்த்து பேசவே மாட்டார். பின், அவர்களாகவே அதை புரிந்துகொண்டு அடுத்த முறை சரியான உடையில் வருவர். அதுமட்டுமின்றி, இவர் எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லாதவர். இதை அவருடன் பணியாற்றுவோரிடமும் எதிர்பார்ப்பார். அவருடைய ஸ்டூடியோவிற்குள் யாரும் மது அருந்திவிட்டோ, புகை பிடித்துவிட்டோ வரக் கூடாது. அப்படி அவர்கள் செய்தால் அவர்களின் பழக்கம் அத்துடன் துண்டிக்கப்படும்.

இது ஒரு சின்னப் பிரச்சனை

அப்படி இருப்பவரை ஊடகங்கள் ஒரு பெண்ணுடன் இணைத்து பேசுவது மிகவும் கொடுமையானது. எல்லோர் வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகள் தான் இவர்களுக்குள்ளும் இருக்கிறது. நாங்கள் ஸ்டூடியோவிற்குள் வந்தால், எங்களுக்கு காலம், நேரம் தெரியாது. அங்கு சூரிய ஒளியோ, கடிகாரமோ கிடையாது. இதனால் நாங்களாக உணர்ந்து நேரத்தை பார்க்கும் வரை எங்களுக்கு நேரம் போவது தெரியாது. இதனால், எங்கள் குடும்பத்திலேயே பிரச்சனை வரும்போது, அவர் உலக அளவில் பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார், இதனால் நிச்சயம் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும்.

பிரிந்து விடுவதாக பலமுறை கூறியுள்ளார்

அந்தப் பிரச்சனை கூட அவருடன் தன்னால் இருக்க முடியவில்லை எனும் பாசப் போராட்டம் தானே தவிர மற்றவை அல்ல. ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, வீட்டிற்கு வரவில்லை என்றால் உங்களை பிரிந்து சென்று விடுவேன் என பலமுறை கூறி இருக்கிறார். பின் இருவரும் வழக்கம்போல சந்தோஷமாக இருக்கத் தான் செய்தார்கள், அதனால் தான், இந்த முறை அவர் கூறியபோதும் ஏ.ஆர்.ரஹ்மான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தனிமையில் இருக்கிறார்

இவருக்குமே சாய்ரா மேம்-ன் அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியைத் தான் தந்தது. அதைப் பார்த்த சமயம் முதல் யாரும் அவரைப் பார்க்க வரவில்லை. அவர் தனிமையில் தான் இருக்கிறார். அவர், தன் மனைவியின் விருப்பத்தை அறிந்துகொண்டு, அவருக்கு சென்னையில் இருப்பது பிடிக்கவில்லை அதனால், வேறு இடத்தில் வீடு வாங்கித் தரவேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார்.

கோபத்தில் எடுத்த முடிவு

அப்படிப்பட்டவரை பிரிந்து எத்தனை நாள் சாய்ரா மேடமால் இருந்துவிட முடியும். இது ஒரு கோவத்தில் எடுத்த முடிவு. இத்தனை நாள் தன்னை கணவர் கண்டுகொள்ளாமல் இருந்ததால் வந்த கோவத்தால் அவர் சோசியல் மீடியாவில் அறிவித்து விட்டார். அவராலும் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து இருக்க முடியாது. அதனால், அவர்கள் விரைவில் வந்து சேர்ந்து விடுவார்கள் என நம்பிக்கையாக பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை