"சாய்ராவுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்தோம்.. ஆனா அவங்க போல்ட்".. உண்மையை ஒப்புக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி
ஏ. ஆர். ரஹ்மான் மனைவி சாய்ராவிற்கு நாங்கள் மிகுந்த தொந்தரவு கொடுத்தோம் என ஏ. ஆர். ரஹைனா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஏர.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தான் ரஹ்மானிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்ட நிலையில், இதனை ஏ.ஆர். ரஹ்மானும் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரின் பிரிவுக்கு என்ன காரணம் என பலரும் விவாதித்து வரும் வேலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹைனா விகடன் தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் பேட்டியில், பல விஷயங்கள் குறித்து பேசும் ரஹைனா, ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு குறித்தும் பேசியுள்ளார்.
ரொம்ப பயங்கரமான போல்ட் லேடி
அந்தப் பேட்டியில்,"எனக்கு அவங்கள பிடிக்கும். ஒரு விதத்துல அவங்க ரொம்ப பயங்கரமான போல்ட் லேடி. அவங்களுக்கு எங்க வீட்டு சைடுல இருந்து ரொம்ப விமர்சனம் கொடுப்பாங்க. இல்ல கொடுத்தோம். ஆனா, அவங்க அதை எல்லாம் அப்படியே தூள் பண்ணிட்டு போயிடுவாங்க.
