"மறக்குமா நெஞ்சம்" மனைவியின் பிரிவை உறுதி செய்த பின் உருக்கமாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "மறக்குமா நெஞ்சம்" மனைவியின் பிரிவை உறுதி செய்த பின் உருக்கமாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்..

"மறக்குமா நெஞ்சம்" மனைவியின் பிரிவை உறுதி செய்த பின் உருக்கமாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்..

Malavica Natarajan HT Tamil
Published Nov 20, 2024 10:33 AM IST

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கும் என மனைவியை பிரிந்த பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக பேசியுள்ளார்.

"மறக்குமா நெஞ்சம்" மனைவியின் பிரிவை உறுதி செய்த பின் உருக்கமாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்..
"மறக்குமா நெஞ்சம்" மனைவியின் பிரிவை உறுதி செய்த பின் உருக்கமாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்..

நாங்கள் மிகவும் நம்பினோம்

"நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.

நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும் போது. எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து அறிவிப்பு

முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, அவரது வழக்கறிஞர் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “ ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் ஏற்பட்ட அழுத்ததிற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால் இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

உறுதிப்படுத்திய மகன் அமீன்

இந்த அறிக்கையை அவரது மகனும் அமீனும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் அவர் இந்த நேரத்தில் எங்களது குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

இவர்களது திருமணம் மறைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மாவின் ஏற்பாட்டின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு நடைபெற்றது. இந்தத்தம்பதிக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற 2 மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசைப் பயணத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவர் சாய்ரா என பல மேடைகளில் தெரிய வந்துள்ளது. என்னதான் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருப்பினும், இது உலகம் முழவதும் உள்ள ஏ.ஆர் ரஹ்மானின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.