தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இசக்கி விஷயத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு.. முரண்பட்டு நிற்கும் பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

இசக்கி விஷயத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு.. முரண்பட்டு நிற்கும் பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Marimuthu M HT Tamil

Oct 22, 2024, 05:21 PM IST

google News
இசக்கி விஷயத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு பற்றியும், முரண்பட்டு நிற்கும் பரணி குறித்தும் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்தும் பார்ப்போம்.
இசக்கி விஷயத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு பற்றியும், முரண்பட்டு நிற்கும் பரணி குறித்தும் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்தும் பார்ப்போம்.

இசக்கி விஷயத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு பற்றியும், முரண்பட்டு நிற்கும் பரணி குறித்தும் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்தும் பார்ப்போம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீட்டில் நடந்த விஷயத்தை ஷண்முகத்திடம் உடைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன?:

அதாவது, ஷண்முகம் கோபப்பட்டு அரிவாளை எடுத்துக்கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்புகிறான். அப்போது அவனை தடுத்து நிறுத்தும் மனைவி பரணி, ’உன் அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்துட்டியா?’ என்று சொல்லி அரிவாளை கீழே போட வைக்கிறாள்.

நாம ரெண்டும் பேரும் போய் பிரச்னையை பேசித் தீர்க்கலாம் என்று சொல்லி ஷண்முகத்துடன் கிளம்பி வருகிறாள். ஷண்முகம் ‘உனக்கு பாதுகாப்பு இல்லாத வீட்டில் நீ இருக்க வேண்டாம்’ என்று சொல்லி தங்கை இசக்கியை வீட்டிற்கு கூப்பிட, அண்ணி பரணி, ‘நீ எதுக்கு வீட்டை விட்டு வெளியே வரணும்?. இது உன்னுடைய வீடு, நீ இங்க தான் இருக்கணும்' என்று சொல்கிறாள். ‘உன் புருஷன் முத்துப்பாண்டி வந்து விடுவான்’ என்று சொல்கிறாள்.

மனைவி பரணியின் பேச்சைக் கேட்டு சாந்தமாகும் ஷண்முகம்:

பிறகு ஷண்முகம் மற்றும் வைகுண்டத்தை வீட்டிற்கு அழைத்து வந்த பரணி அத்தகைய முத்துபாண்டியையே மாற்றினவ தங்கச்சி இசக்கி, ‘மத்தவங்களை அவ மாத்துவா.. அவ வாழ்க்கை நல்லா இருக்கும்’ என்று சொல்கிறாள். ஆனாலும் ஷண்முகம் மற்றும் வைகுண்டம் என இருவரும் இசக்கி அந்த வீட்டில் இருப்பதில் உடன்பாடு இல்லாமல் பரணியின் முடிவுக்கு சம்மதம் சொல்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா சீரியலில் நேற்று நடந்தது என்ன?:

அர்த்த ராத்திரியில் அண்ணன் ஷண்முகத்துக்கு போன் செய்யும் தங்கை இசக்கி கட்டிக்கொடுத்த வீட்டில் இருந்து பேசும்போது பதற்றத்துடன் பேசுகிறாள். அதை உணரும் ஷண்முகம் என்னவென்று விசாரிக்கிறார். ஆனால், தங்கை இசக்கி, ‘அண்ணே நான் காலையில் பேசுதே. வைச்சிடுதே’ எனச் சொல்லி அண்ணன் ஷண்முகத்திடம் போனை கட் செய்கிறாள்.

பின் மீண்டும் தங்கைக்கு கால் செய்யும் ஷண்முகம், ஏதோ பிரச்னை என்று புரிகிறது என்றும்; அதைச் சொல்லச் சொல்லி அழுத்தி கேட்கிறார். இதனால், அழுதுகொண்டே பேசும் தங்கை இசக்கி,’அவுக நம்ம அப்பாவை அடிச்சுப்புட்டாங்க’ என்று சொல்கிறார். மேலும், ’பெரியாத்தாவிடம் கேட்க வந்த அப்பாவை அடிச்சுப்புட்டாங்கண்ணே’ என்று கண்கலங்கிக்கொண்டே போனில் சொல்கிறாள்.

உடனே டென்ஷன் ஆகும் ஷண்முகம், ‘எலே சவுந்தரபாண்டி, ஏண்டி பாண்டியம்மா, எங்க அப்பா மேலாயா கையை வைச்சிருக்கீங்க. என்ன தைரியம் இருந்தால், எங்க அப்பா மேலேயே கையை வைச்சிருப்பீங்க’ என எகிறுகிறார். இதில் வீட்டில் அருகில் படுத்திருக்கும் அவரது மனைவி சட்டென எழுந்துவிட்டார்.

உடனே, தன் மனைவியிடம் ‘ எலே நீ அந்த விஷயத்தை மறைச்சிட்டியிளே. அவனுக செத்தானுக’ என்கிறார், ஷண்முகம். உடனே, ‘எங்கேயும் போக வேண்டாம் என அவரது கையைப் பிடித்து அழுகிறாள், அவரது, மனைவி. அதை உதறிவிட்டு ஷண்முகம் கிளம்பிச்செல்கிறார். நேரடியாக பெரியாத்தா வீட்டுக்குச் சென்று, செளந்திரபாண்டி முன் அவரது அக்காவைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை