Anna: ரத்னா எடுத்த முடிவு.. தாலியை கேட்கும் வெங்கடேஷ், ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி?-anna serial episode on weekend sep 14 and sep 15 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna: ரத்னா எடுத்த முடிவு.. தாலியை கேட்கும் வெங்கடேஷ், ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி?

Anna: ரத்னா எடுத்த முடிவு.. தாலியை கேட்கும் வெங்கடேஷ், ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி?

Aarthi Balaji HT Tamil
Sep 14, 2024 02:37 PM IST

Anna: சௌந்தரபாண்டி திட்டத்தின் படி சூடாமணி பற்றி பேசி ரத்னாவின் பீலிங்கை கிளறி விட அவள் இசக்கிக்கு போன் செய்ய அவள் விளக்கு எரியாத விஷயத்தை சொல்கிறாள்.

Anna: ரத்னா எடுத்த முடிவு.. தாலியை கேட்கும் வெங்கடேஷ், ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி?
Anna: ரத்னா எடுத்த முடிவு.. தாலியை கேட்கும் வெங்கடேஷ், ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8: 30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ரிசப்ஷனுக்கு வந்து விட ஷண்முகம் வீட்டில் சூடாமணிக்கு விளக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தாய் மாமனுக்கு டாஸ்க்

அதாவது, சௌந்தரபாண்டி சூடாமணி பற்றி பேசி ரத்னாவின் பீலிங்கை கிளற சொல்லி வெங்கடேஷ் தாய் மாமனுக்கு டாஸ்க் கொடுக்கிறார். ஷண்முகம் வீட்டில் மரத்தடியில் விளக்கு போட எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிய ஒரு பக்கம் வைகுண்டம் துக்கம் தாங்காமல் சரக்கடித்து புலம்பியபடி இருக்கிறார்.

பிறகு அவரையும் அழைத்து வந்து விளக்கு போட விளக்கு எரியாமல் இருக்க காற்றின் காரணமாக எரியவில்லை என்று நினைத்து தடை கட்டி விளக்கேற்ற அப்போதும் விளக்கு எறியதால் வைகுண்டம் அந்த சௌந்தரபாண்டி தலையை கொண்டு வந்து வைத்து விளக்கு ஏற்றினால் எரியும் என்று ஆவேசப்பட ஷண்முகம் அவரை திட்டுகிறான்.

ரத்னாவின் பீலிங்

இங்கே சௌந்தரபாண்டி திட்டத்தின் படி சூடாமணி பற்றி பேசி ரத்னாவின் பீலிங்கை கிளறி விட அவள் இசக்கிக்கு போன் செய்ய அவள் விளக்கு எரியாத விஷயத்தை சொல்கிறாள். கனி ஒரு வேலை அம்மாவுக்ய் நம்ம மேல கோபமா என்று பேச ரத்னா ரிசப்ஷன் தொடங்க இன்னும் 1 மணி நேரம் இருப்பதால் அம்மாவுக்கு விளக்கு போட கிளம்பி வருகிறாள்.

வீட்டிற்கு வந்த ரத்னா விளக்கு போட்டதும் விளக்கு எரிய அனைவரும் சந்தோசப்படுகின்றனர், பூஜையும் நல்லபடியா நடந்து முடிகிறது. மறுபக்கம் வெங்கடேஷ் ரத்னாவை பார்க்க வர அவள் இல்லாமல் இருக்க தாய் மாமா அவ அம்மாவுக்கு விளக்கு போடுறது தான் முக்கியம்னு போய்ட்டா என்று ஏற்றி விடுகிறான்.

இதனால் கோபமாகும் வெங்கடேஷ் ரிஸப்ஷனை நிறுத்தி விட்டு கோபமாக கிளம்பி ஷண்முகம் வீட்டிற்கு வருகிறான். ரத்னாவிடம் உனக்காக நிறைய விட்டு கொடுத்து போய்ட்டேன், இனிமேலும் என்னால் விட்டு கொடுக்க முடியாது. நான் ஒரு தேதியை சொல்றேன், வந்து தாலியை கழட்டி கொடுத்திட்டு போ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்து நடக்க போவது என்ன?

சௌந்தரபாண்டிக்கு விஷயம் தெரிந்து சந்தோசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.