Anna: சௌந்தரபாண்டியை அவமானப்படுத்திய ஷண்முகம்.. முத்துப்பாண்டி எடுத்த முடிவு
அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

அண்ணா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பள்ளியில் முத்துப்பாண்டி ஆட்கள் பத்திரிகையை கொடுக்க ரத்னா அதிர்ச்சியடைந்து நிற்க போலீஸ் சௌந்தரபாண்டியை பகைச்சிட்டு உங்களால வாழ முடியாது, முத்துப்பாண்டி அன்னைக்கு வெங்கடேஷோட ட்ரெஸ்ஸை உருவிட்டு நிற்க வைத்தார், அப்போ உங்கள் நிலைமை என்று சொல்ல அவள் கண்ணீருடன் வீட்டுக்கு ஓடி வருகிறாள்.
மறுபக்கம் பரணி உட்பட எல்லாரும் பேசி கொண்டிருக்க வைகுண்டம் பரணியை புகழ்ந்து பேசுகிறார், இந்த நேரம் பார்த்து சில்லறை எடுத்துட்டு செல்ல ஷண்முகம் வேகவேகமாக வீட்டுக்கு வந்து திரும்பி செல்ல அப்போது ரத்னா கண்ணீருடன் வந்து நிற்கிறாள்.