Aishwarya Rai Bachchan : ‘3 பேருடன் வாழ்க்கை.. கை மாறிய சொத்து..’ ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பிரிவு பற்றி பயில்வான்!
Jul 29, 2024, 01:55 PM IST
இதனால் ஆத்திரமடைந்து, அபிஷேக்கை தூண்டிவிட்டு, தந்தையிடம் கேட்கச் சொல்லியுள்ளார் ஐஸ்வர்யா. அபிஷேக் போய் கேட்க, ‘ஆமாம்.. என் சொத்து நான் எழுதி கொடுத்தேன்.. உனக்கு என்ன’ என்று அமிதாப் கூறியுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
கோலிவுட்டை ஒருவழியாக்கிக் கொண்டிருக்கும் சினிமா நடிகர்கள் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், பாலிவுட் பிரபலமான ஐஸ்வர்யா ராய் குறித்து பரபரப்பான கருத்துக்களை கிங் 24x7 என்கிற யூடியூப் சேனலில் பேசியுள்ளார். இதோ அவருடைய பேச்சு:
ரஜினியை விட்டு வைக்கவில்லை
‘‘நிம்மதியா தூங்குபவன் யார் தெரியுமா? நடைபாதையில் தூங்குபவன் தான். கிடைத்ததை சாப்பிடுவான், கிடைப்பதை குடிப்பான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால், கோடியில் புரளுபவர்களுக்கு நிம்மதி இருக்காது. தூக்கம் மாத்திரை போட்டு தான் தூங்குவார்கள். உதாரத்திற்கு ரஜினிகாந்த்.
72 வயதிலும், தன் பேத்தி வயது பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ஆனால், நிம்மதி? அவருடைய இரண்டு மகள்களின் வாழ்க்கையும் நிம்மதியாக இல்லை. எப்படி ரஜினி சந்தோசமாக இருப்பார்? அவர் சந்தோசமாக இருப்பது போல நடிக்கிறார்.
ஐஸ்வர்யா தான் வேணும்
முதலில் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அமிதாப். ‘தனக்கு ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்’ என அபிஷேக் பச்சன் அடம்பிடித்தார். அப்போது அமிதாப்பிற்கு தூக்கி போட்டது. மூன்று இந்தி நடிகர்களுடன் வாழ்க்கை நடத்தியவர், காதலில் தோல்வியுற்றவர். அபிஷேக் பச்சனை விட 7 வயது மூத்தவர் ஐஸ்வர்யா. வேறு வழியில்லை, மகன் ஒரு காலில் நின்றதால், ஐஸ்வர்யா ராயை மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தின் போது என்ன நினைத்தார்கள் என்றால், வீட்டு மனைவியாக, நம்முடைய மருமகளாக, மகனுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்று தான் அமிதாப் மற்றும் ஜெயா நினைத்தனர். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஐஸ்வர்யா தொடர்ந்து நடித்தார். விழாக்களில் கலந்து கொண்டார். கோடிகளில் மிதந்தார்.
இது ஜெயாபச்சனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நம்மிடம் இருக்கும் பணம் போதாதா என்று கடுப்பானார். இதே தான், நாகர்ஜூனா வீட்டிலும் நடந்தது. சமந்தா அப்படி தான் பிரிந்தார். அதனாலேயே ஐஸ்வர்யா ராய் உடன் பேச்சுவார்த்தையை தவித்தார் ஜெயா பச்சன். அதன் பின் அமிதாப் பச்சனும் பேச்சை நிறுத்தினார்.
பிரிய காரணம் என்ன தெரியுமா?
சமீபத்தில் அம்பானி வீட்டு திருமணத்தில் அபிதாப் குடும்பம் தனியாகவும், மகள் ஆராத்யா உடன் ஐஸ்வர்யா தனியாகவும் வந்திருந்தார். ஏன் இந்த மோதல்? சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்கிறார்கள். தன் விலை உயர்ந்த சொத்து ஒன்றை, மகளுக்கு எழுதி வைத்துள்ளார் அமிதாப்.
இதனால் ஆத்திரமடைந்து, அபிஷேக்கை தூண்டிவிட்டு, தந்தையிடம் கேட்கச் சொல்லியுள்ளார் ஐஸ்வர்யா. அபிஷேக் போய் கேட்க, ‘ஆமாம்.. என் சொத்து நான் எழுதி கொடுத்தேன்.. உனக்கு என்ன’ என்று அமிதாப் கூறியுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அது தான் இப்போது, அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் இடையே விவாகரத்து என்று எழத் தொடங்கியுள்ளது. இருவரும் இதுவரை விவாகரத்து குறித்து பேசவில்லை. பேசாததால், என்னைப் போன்றவர்களுக்கு வெறும் வாயை மெல்லாமல், தீனி கிடைத்திக்கிறது. இருந்தாலும், அவர்கள் இருவரும் பிரியாமல் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
குறிப்பு: இதில் வரும் கருத்துக்கள் அனைத்தும் பயின்வால் ரங்கநாதனின் சொந்த கருத்துக்கள், இதற்கும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பேட்டி என்கிற அடிப்படையில் மட்டுமே வெளியிடப்படுகிறது. இதன் உண்மை தன்மைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
டாபிக்ஸ்