Anna Serial: செளந்திரபாண்டியனை சட்டினியாக்கிய பாக்யா… குடும்பம் செய்யும் சூழ்ச்சி - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: மதினி நீங்களா? இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க என்று கேட்க, சௌந்தரபாண்டி தனக்கு செய்த துரோகம், ஜெயிலில் பட்ட கஷ்டம் என மொத்தத்தையும் சொல்கிறாள். - அண்ணா சீரியல் அப்டேட்
Anna Serial: சூடாமணியை சந்தித்த பாக்கியம்.. வெளிவந்த உண்மை, சௌந்தரபாண்டிக்கு நடந்த தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் ரத்னா உட்பட மூன்று தங்கைகளும், என் அம்மா எங்க இருக்காங்க, அவங்கள பத்தி சொல்லுங்க என்று கேட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நேற்று நடந்தது என்ன?
அதாவது, சூடாமணி தான் ஒரு உத்தமி தான் என்பதை ஒரு பாட்டாகவே படிக்க, அதை கேட்டு எல்லாரும் எமோஷனல் ஆகின்றனர். அடுத்து ரூமுக்கு வந்த ஷண்முகமும், பரணியும் அந்த சௌந்தரபாண்டிக்கு, தண்டனை வாங்கி தராமல் விடக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.
அதன் பிறகு, அடுத்த நாள் காலையில், சூடாமணி வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருக்க, அப்போது பாக்கியம் வீட்டிற்கு வர, சூடாமணியை பார்த்து விடுகிறாள், மதினி நீங்களா? இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க என்று கேட்க, சௌந்தரபாண்டி தனக்கு செய்த துரோகம், ஜெயிலில் பட்ட கஷ்டம் என மொத்தத்தையும் சொல்கிறாள்.
ஆவேசமான பாக்கியம்
இதனால் ஆவேசமாகும் பாக்கியம், இவ்வளவு நடந்த பிறகும், அந்த ஆளாய் எதுக்கு விட்டு வச்சிருக்கீங்க? கொன்னு போட வேண்டியது தானே என்று சொல்ல, சூடாமணி அவனை கொல்ல கூடாது, நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும் அவனும் படணும். அதுக்கு தான் அவனை விட்டு வச்சிருக்கோம் என்று சொல்கிறாள்.
இதை தொடர்ந்து, பாக்கியம் வீட்டிற்கு கிளம்பி வர, சௌந்தரபாண்டி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, பேய் பிடித்தவள் போல வந்த பாக்கியம், டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசி போடுவதோடு, சட்டினியை சௌந்தரபாண்டி மீது ஊற்றி, ஏண்டா இப்படி பண்ண என்று பளார் பளார் என்று அறைந்து சாமியாடுகிறாள்.
சௌந்தரபாண்டி இவளுக்கு என்னாச்சு என்று ஒன்றும் புரியாமல் நிற்கிறார். மறுப்பக்கம், சூடாமணிக்கு ஆறுதல் சொல்லி ஆசுவாசப்படுகின்றனர். சௌந்தரபாண்டிக்கு ஒரு வேளை சூடாமணியை பார்த்து இருப்பாளோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம் அப்டேட்
அதாவது, சேகர் ரம்யாவுக்கு போன் செய்து, என்னுடைய பையை காணவில்லை. அதுலதான், டோப்பா, தாடி என சாமியார் கெட்டப் பொருள்கள் எல்லாத்தையும் வச்சு இருந்தேன் என்று சொல்கிறான். மேலும், அந்த பையை இளையராஜா மாற்றி எடுத்து போய் இருக்கலாம் என்று சொன்னதும், ரம்யா பேரதிர்ச்சி அடைகிறாள்.
உடனே அவள் இளையராஜா வீட்டிற்கு வந்து, அவனுக்கே தெரியாமல் பேக்கை தேடி பார்க்கிறாள். ஆனால், அது அங்கு இல்லை என்று தெரிகிறது. இதனையடுத்து அவளது பயம் இன்னும் அதிகமாகிறது. அதனை தொடர்ந்து, அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர அனைவரும் தயாராக, ஆனந்த் அந்த விஷயத்தை ரம்யாவுக்கு சொல்ல போனை எடுக்கிறான். இதற்கிடையே, மீனாட்சி போனை வாங்கி விஷயத்தை சொல்கிறாள்.
கடுப்பான ரம்யா
இதனையடுத்து, ரம்யா ஹாஸ்பிடலுக்கு ஓடி வர, அங்கு அபிராமி இல்லை என்று தெரிந்ததும், கடுப்பாகி வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். இங்கே, அபிராமிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல தயாராக இருக்க, ரம்யா பொக்கேவை கொடுத்து, நான் உங்களுக்காக பரிகாரம் செய்ததால்தான், நீங்க உயிர் பிழைத்தீங்க என்று சொல்லி நல்ல பேர் சம்பாதிக்க ஸ்கெட்ச் போடுகிறாள்.
ஆனால் அபிராமி, அப்படியெல்லாம் இல்ல.. நான் கோமாவில் இருந்த போது, தீபா பாடிய பாட்டு என் காதில் கேட்டது என்று சொல்கிறாள். ரம்யா அது எப்படி உங்களுக்கு கேட்கும் என்று கேள்வி கேட்டாள். உடனே, அபிராமி அந்த பாட்டை பாடி காட்ட, கார்த்திக், தீபா இதே பாட்டை தான் கோயிலில் பாடினாள் என்று சொல்கிறான். மேலும் இவங்க செய்தது பரிகாரமே இல்ல.. அந்த சாமியார் போலி சாமியார் என்ற உண்மையையும் உடைக்கிறான்.
சிலாகித்த குடும்பம்
அடுத்து, தீபாவை அதே பாட்டை மீண்டும் பாடச் சொல்லி, அதை அனைவரும் கேட்டு ரசிக்கின்றனர். அபிராமி சொன்ன வார்த்தையால் , ல்லாரும் தீபாவை நினைத்து சிலாகித்து பேசவும் தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்