Aishwarya Rajesh: குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையில் சிரமப்பட்ட தந்தை.. ஐஸ்வர்யா ராஜேஷின் மறுபக்கம்
Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பம் மற்றும் தொழில் பற்றி பேசியுள்ளார். ஒரு போட்காஸ்டில் பேசிய அவர் தன் வாழ்க்கை பற்றி மனம் திறந்து கூறி உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகினருக்கு மிகவும் பிடித்தமானவர். ஐஸ்வர்யா ராஜேஷ் பல குறிப்பிடத்தக்க படங்களில் ஒரு பகுதியாக நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பம் மற்றும் தொழில் பற்றி பேசியுள்ளார். ஒரு போட்காஸ்டில் பேசிய அவர் தன் வாழ்க்கை பற்றி மனம் திறந்து கூறி உள்ளார்.
தந்தையின் மரணம்
அவர் கூறுகையில், “ என் தந்தை அழகாக இருந்தார். அதே அம்சங்கள் எனக்கும் கிடைத்துள்ளது. அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை படுக்கையில் இருந்தார். நான் முழு நேரமும் அங்கேயே இருந்தேன். அவர் தனது சகோதரர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தந்தையின் மரணம் குடும்பத்தையே உலுக்கியது. அம்மா எப்போதும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். எனது தந்தையின் சகோதரிகள் அனைவரும் எங்களுடன் இருந்தார்கள்.