தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Sonia: திவ்யா..ஏஞ்சல்..அனிதா நினைவிருக்கா? சோனியா அகர்வால் பிறந்தநாள் இன்று!

HBD Sonia: திவ்யா..ஏஞ்சல்..அனிதா நினைவிருக்கா? சோனியா அகர்வால் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil

Mar 28, 2023, 06:19 AM IST

Actress Sonia Agarwal : சோனியா அகர்வால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Actress Sonia Agarwal : சோனியா அகர்வால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Actress Sonia Agarwal : சோனியா அகர்வால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இவர் 1982 ஆம் வருடம் மார்ச் 28 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் சோனியா அகர்வால் நடித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Kovai Sarala: அப்பா இறப்பிற்கு கூட போகாத கோவை சரளா.. பின்னால் இருக்கும் காரணம் இதுவா?

14 years of Irumbukkottai Murattu Singam: கவ்பாய் வேடத்தில் கலக்கிய ராகவா லாரன்ஸ்.. கற்பனை உலகை படைத்த சிம்புதேவன்

Oru Nodi Team: மீண்டும் இணையும் ‘ஒரு நொடி’ குழு.. களத்தில் இறங்கிய தனஞ்செயன்.. டைரக்டர் யாரு தெரியுமா?

Ilaiyaraaja: ‘பாட்டும் இல்லை.. இசையும் இல்லை..’ வைரமுத்து vs இளையராஜா பஞ்சாயத்திற்கு அன்றே ‘பஞ்ச்’ கொடுத்த வாலி!

2006ம் வருடம் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில வருடங்களில் அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்தார்.அதன் பிறகு மீண்டும் வானம், தடம் அயோக்கியா போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.

காதல் கொண்டேன் படம்

சோனியா அகர்வால் என்று சொல்வதை விட திவ்யா. ஏஞ்சல், அனிதா இப்படி சொன்னால் நினைவுக்கு வருவது சோனியா அகர்வால் தான். காதல் கொண்டேன் படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கவந்தது என்றே சொல்லலாம். கல்லூரியில் சாதுவான ஒரு மாணவராக தோன்று கதாநாயகன் தனுஷ், வகுப்பில் உள்ள அத்தனை பேரும் தன்னை அருவருப்போடு ஒதுக்க. ஆறுதலாக நட்பு பாராட்டும் சக மாணவியாக சோனியா அகர்வால் அறிமுகமாகிறார்.

சோனியா அகர்வால் நட்பாக காட்டும் பாசத்தை தனுஷ் காதல் என்று தப்பாகப் புரிந்துகொள்கிறார். வகுப்பில் வேறு மாணவர் சுதிப்புக்கும் சோனியாவுக்கும் காதல் மலர தன்னையும் அறியாமல் தனக்குள் ஒளிந்திருக்கும் சைக்கோ சுயரூபத்தைக் காட்டத் தொடங்கும் தனுஷ்.

காதலனோடு சேர்த்து வைக்கிறேன் எனக் கூறி சோனியாவைக் காட்டுக்குள் கூட்டிப்போகிறார் அங்கு என்ன என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. இதில் சோனியா தனுஷ் இருவரும் நடிப்பில் அசத்தி இருப்பார்கள். முதல் படத்திலேயே ஏரளாமான ரசிகர்கள் பட்டாளமே சோனியா அகர்வாலுக்கு உருவானது.

கோவில் திரைப்படம்

பின்னர் நடித்த கோவில் படத்தில் ஏஞ்சல் ஆகவே வாழ்ந்து இருப்பார் சோனியா. கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார். அதே போல தான் 7 ஜி ரெயின்போ காலனி படத்திலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பார். இப்படி தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார் சோனியா.90ஸ் கிட்ஸ்களுக்கு கனவு கண்ணியாக இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு சோனியா அகர்வாலுக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் குணச்சித்திர வேடங்களிலும், கவர்ச்சி கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் தற்போது இவர் வெப் சீரிஸ் களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அதில் இவர் பாடகர் எஸ்.பி.பி சரன் உடன் ஒன்றாக நடித்திருந்தார். அப்போது அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்ற வதந்தியும் பரவியது.

7ஜி ரெயின்போ காலனி

இதற்கு விளக்கம் அளித்து சோனியா அகர்வால் கூறும்போது, "ஒரு தொடரில் நானும், எஸ்.பி.பி.சரணும் நடித்த திருமண காட்சி புகைப்படம் வெளியாகி நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்தியை பரப்பினர். எனக்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று விசாரித்தனர்.

நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன். எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்து இருக்கிறேன்'' என்றார்.

இன்று சோனியா அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சோனியா அகர்வால்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.