தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காலு உடைஞ்சு கிடந்தும் என்ன விடல.. இதெல்லாம் ஒரு கேரக்டரான்னு கேட்டாங்க.. சிநேகா ரீகால்

காலு உடைஞ்சு கிடந்தும் என்ன விடல.. இதெல்லாம் ஒரு கேரக்டரான்னு கேட்டாங்க.. சிநேகா ரீகால்

Dec 05, 2024, 12:37 PM IST

google News
நடிகை சிநேகா விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த சமயத்திலும் டைரக்டர் என்னிடம் கதை சொல்ல வந்தார் எனக் கூறியுள்ளார்.
நடிகை சிநேகா விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த சமயத்திலும் டைரக்டர் என்னிடம் கதை சொல்ல வந்தார் எனக் கூறியுள்ளார்.

நடிகை சிநேகா விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த சமயத்திலும் டைரக்டர் என்னிடம் கதை சொல்ல வந்தார் எனக் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என்ற பட்டத்தோடு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிநேகா. இவர் தன் சினிமா வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை சில நாட்களுக்கு முன்பு கலாட்டா மீடியா யூடியூப் சேனலில் பேசியிருப்பர்.

படுத்த படுக்கையா இருக்கும் போதும்..

அந்தப் பேட்டியில் பேசிய சிநேகா, படத்துக்காக எனக்கு கரு.பழனியப்பன் கதை சொல்லும் போது நான் அக்சிடெண்ட் ஆகி படுத்து இருக்கேன். என்னோட கால்ல நிறைய எலும்பு உடஞ்சி போச்சு. கால அசைக்கக் கூட முடியாது. முதுகுலயும் எனக்கு எலும்பு எல்லாம் உடஞ்சு போச்சு. என்னால உக்காரக்கூட முடியாது. நான் ஃபுல்லா படுத்துருக்கேன். அந்த சமயத்துலயும் விடாம என்கிட்ட கதை சொல்றாரு. சொல்லிட்டு உங்களுக்கு எல்லாம் ஒன்னும் இல்லமா.. நீங்க இன்னும் 2 மாசத்துல முழுசா குணமாகி வந்துடுவிங்கன்னு சொல்லிட்டு போறாரு.

எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணாங்க

அவரு சொன்ன மாதிரியே கரெக்டா 2 மாசத்துக்கு அப்புறம் நான் ஏப்ரல் மாதம் படத்தோட ஷூட்டிங் போறேன். நான் குச்சி வச்சிட்டு அப்படியே நடந்து போய் உக்காருவேன். படத்தோட முதல் பாதி முழுவதும் நான் உக்கார்ந்தே தான் நடிச்சிருப்பேன். எனக்கு தகுந்த மாதிரி சீனும் அவங்க எல்லாரும் எடுத்தாங்க எனக் கூறினார்.

அப்பாவோட போகும் போது இந்த கதை

புதுப்பேட்டை படத்துக்கான கதைய நான் என் அப்பாவோட போய் கேட்டேன். இந்த கதைய கேட்ட உடனே எனக்கு ஒரு மாதிரி தயக்கமா இருந்தது. அதபத்தி நான் யோசிச்சிட்டே இருந்தேன். அப்போ என் அப்பா தான் நெறைய இந்தி படத்தோட நடிகைங்க பத்தி எல்லாம் சொல்லி இவ்ளோ பேர் உனக்கு முன்னாடி இந்த மாதிரி கேரக்டர்ல நடச்சிருக்காங்க.

டைரக்டர் செல்வராகவன் சொன்ன கதை ரொம்ப நீட்டா இருக்கு. உனக்கு சொன்ன கேரக்டர் ரொம்ப தெளிவா இருக்கு. உன்ன எங்கயும் தப்பா காமிக்குற மாதிரி சீன் இல்ல. இனிமே படத்துல நடிக்கலாமா வேணாமான்னு நீயே யோசின்னு அப்பா சொல்லிட்டாரு.

ஏதோ ஒன்னு இருக்கு

எங்க அப்பா இப்படி சொன்னது எனக்கு பெரிய விஷயமா இருந்தது. எங்கப்பாவ ஸ்கூல்ல ஹிட்லர்ன்னு கூப்டுவாங்க. அந்த அளவுக்கு அவர் ஸ்ரிட். அப்பாவுக்கு இந்த கேரக்டர் பிடிச்சிருக்குன்னா இதுல ஏதொ ஒன்னு இருக்குன்னு நான் நடிச்சேன்.

இதெல்லாம் ஒரு கேரக்டரா?

இந்தப் படம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் ஒருத்தர் மட்டும் போன் பன்னி என்ன திட்டுனாரு. ஏன், இந்த படத்துல நடிச்சன்னு கேட்டாரு. ஆனா, அவரே படத்த பாத்துட்டு என்ன பாராட்டுனாரு.

நான் இதுவரைக்கும் 80க்கும் மேல படம் பண்ணிருக்கேன். எந்த படம் ஹிட் ஆச்சு, எது ஆகலன்னு திரும்பி நின்னு பாக்க எனக்கு நேரமே இல்ல. நான் தெலுங்கு படத்துல நடிக்கும் போது தடுக்கி விழுந்தா வெளிநாட்டுல பாட்டு வரும். அதுனால, நான் இப்போ வரைக்கும் படம் ஹிட்டா இல்லையான்னு பாக்கவே இல்ல.

நிஜமாவே உதை வாங்குனேன்

புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் போது, வில்லன் என்னை அடித்து உதைக்குற மாதிரி ஒரு சீன் வரும். அத நெறைய டைம் எடுத்தும் செல்வராகவன் சாருக்கு அது நெஜமா இருக்க மாதிரி தெரியல. அதுனால, நடிக்குற வேகத்துல அவரு என்ன நெஜமாவே உதச்சிட்டாரு. வயிறுல செம அடி பட்டுருச்சி. இந்த சீன் முடிஞ்சதும் ஒரு 2 நிமிஷம் சார்ன்னு பர்மீஷன் கேட்டுட்டு கேரவன்ல உக்காந்து அழுறேன். அத பாத்துட்ட யாரோ செல்வா சார்கிட்ட போய் சொல்லிட்டாங்க. அப்புறம் அவர் என்ன வந்து பாத்து ரிலாக்ஸ் ஆக சொல்லிட்டு போனாரு.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி