Prasanna on Divorce: பிரசன்னா - சிநேகா விவாகரத்து? - உடைத்து பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரசன்னா!
பிரசன்னா -சிநேகா தம்பதி விவாகரத்து செய்து கொள்ள போவதாக வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னா பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளுள் ஒன்று சினேகா பிரசன்னா. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் முதன்முறையாக இணைந்த இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறு பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தங்களது 11 ஆவது திருமண நாளை சினேகாவும், பிரசன்னாவும் கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “ .. பொண்டாட்டி இந்த சிறப்பான நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது. என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் இருந்தன. ஆனால் நான் உன் கையைப்பிடித்துக்கொண்டு நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்த பயணத்திற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். நான் நிறைய கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டேன் . ஆனால் நீ என் பக்கத்தில் இருந்ததால் அது எதுவும் என்னை ஒன்றும் செய்ய வில்லை. உன்னுடைய காதல் வெளிச்சம் அந்த இருட்டான பாதையில் என்னை வழிநடத்தியது. நான் அதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் துணையே!
நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய். உன்னுடையை கையைப் பிடித்துக்கொண்டு தொலை தூர நாடுகளுக்கு செல்ல விருப்பம் உள்ளது.
இனிய திருமண நாள் வாழ்த்துகள். எனது அன்பே … என் கண்ணம்மா.. ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழ்வோம். உன்னை எப்போதும் காதலிக்கிறேன். நமது காதல் வலுவானது. நம்மை பற்றி மில்லியன் கணக்கில் வதந்திகள் வந்தாலும் அவை நொறுங்கி சுக்குநூறாக போகட்டும். வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ்வோம்'' என்று அதில் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்